Published : 19 May 2020 01:24 PM
Last Updated : 19 May 2020 01:24 PM

ஆக்ஸ்போர்ட் கரோனா வாக்ஸைன் முயற்சி தோல்வி? - குரங்குகளில் தொற்றைக் கட்டுப்படுத்தவில்லை என ஆய்வாளர்கள் ஏமாற்றம்

உலகம் முழுதும் கரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 48 லட்சத்து 95 ஆயிரத்து 33 என்று ஆனதையடுத்தும் பலி எண்ணிக்கை 320,192 ஆக அதிகரித்ததையடுத்தும் கரோனா வாக்சைன்கள் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

இந்நிலையில் கரோனா வாக்சைன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் வாக்சைன் குரங்குகளிடத்தில் சோதிக்கப்பட்ட போது பரவலை அதனால் தடுக்க முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆனால் நிமோனியாவைத் தடுப்பதாகத் தெரிகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ChAdOx1 nCoV-19 என்ற இந்த வாக்சைன் குரங்குகளைத் தொற்றும் அடினோ வைரஸ்க்கு எதிரானது, ஆனால் இது மனிதர்களில் வைரஸ் இரட்டிப்பாவதை தடுக்க முடியவில்லை. இந்த வாக்சைன் அளித்த நம்பிக்கையினால் புனேயில் உள்ள சீரம் கழகம் மே மாத முடிவில் 40 முதல் 50 லட்சம் டோஸ்களை தயாரிக்க திட்டமிட்டிருந்தது.

ஆனால் அதற்குள் இந்த ஆய்வில் இந்த வாக்சைன் மனித தொற்றுக்கும் மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும் சங்கிலித் தொடரையும் உடைக்கும் திறனற்றது என்றும் தெரியவந்தது. ஏனெனில் குரங்குகளிலேயே இதனால் வைரஸ் பரவலைத் தடுக்க முடியவில்லை என்று தெரியவந்துள்ளது.

தேசிய தடுப்பு மருந்தியல் ஆய்வு பேராசிரியரும் சிஎஸ்ஐஆர்-ஐச் சேர்ந்த மரபணுவியல் மற்றும் ஒருங்கிணைப்பு உயிரியல் கழகத்தின் முன்னாள் தலைவருமான ராஜேஷ் கோகலே இந்த வாக்சைன் ஆய்வுக்கட்டுரையை வாசித்து விட்டு, குரங்குகளில் சோதிக்கப்பட்டதன் ஆய்வு முடிவுகளைக் கொண்டு மனிதர்களில் இதனைச் சோதனை செய்வது நல்லதல்ல, என்றார்.

“விலங்குகளில் மேல்புற சுவாசப்பாதையில் இந்த வைரஸ் இருப்பதைக் காண்கிறோம். இது கீழ் சுவாசப்பாதைப் பகுதிக்கு இறங்குவதையும் சாத்தியம் என்று கருதுகிறோம் இதன் மூலம் நிமோனியா காய்ச்சல் வரும். வாக்சைன் கொடுத்தால் அனைத்து வைரஸ்களும் அழிக்கப்பட வேண்டும்.

ஆய்வாளர்கள் மேல்புற சுவாசப்பாதையில் வைரஸ் இருப்பதை அங்கீகரிக்கின்றனர். நுரையீரலில் வைரஸ் இரட்டிப்பாதல் அல்லது பிரதியெடுத்தலில் வித்தியாசம் இருந்தும் மூக்கில் வைரஸ் குறைவை உறுதி செய்ய முடியவில்லை. ” என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர், அதாவது முழுதும் இந்த வைரஸ்களை அழிக்க முடியவில்லை.

இதற்குக் காரணம் குரங்குகளின் வாழ்முறை அது அதிக வைரஸ்களினால் பாதிக்கப்படுவதை உறுதி செய்கிறது. இந்த அளவுக்கு வைரஸ்களினால் மனிதர்கள் பாதிப்படைவதில்லை.

இந்த வாக்சைன் சோதனையில் சுமார் 1,110 நபர்கள் பங்கேற்றனர். இந்த வாக்சைன் பாதிப்பேருக்குக் கொடுக்கப்பட மீதி பாதிப்பேருக்கு மூளைக்காய்ச்சல் தடுப்பு வாக்சைன் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x