Published : 19 May 2020 09:30 AM
Last Updated : 19 May 2020 09:30 AM
பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள உ.பியைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக 12 ஆயிரம் பேருந்துகளை இயக்க உத்தர பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு மார்ச் 25-ம் தேதி அன்று தொடங்கப்பட்டது. இதன் காரணமாக பலரும் வேலை இழந்தனர். நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு கால்நடையாக, மிதிவண்டிகளில் அல்லது லாரிகளில் நீண்ட மற்றும் கடினமான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த விபத்துகளில் பலர் பலியாகினர்.
உத்தரப் பிரதேசத்தின் ஒரய்யா மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரியும், மற்றொரு லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவது தொடர்பாக தொடர்ந்து ஏற்பட்டு வரும் துயரங்களின் தொடர்ச்சியாகவே இந்த விபத்தும் கருதப்படுகிறது.
இதையடுத்து உ.பி.யில் 24 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அவர்கள் இனி நடக்கவோ பிற வாகனங்களில் செல்லவோ தேவையில்லை, பேருந்துகளில் செல்லலாம் என யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள உ.பியைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக 12 ஆயிரம் பேருந்துகளை இயக்க உத்தர பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT