Published : 18 May 2020 05:47 PM
Last Updated : 18 May 2020 05:47 PM
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை ஒருநேரத்தில் கடுமையாக விமர்சித்த பிரதமர்மோடி, இன்று அந்த திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தமைக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்
கரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலருந்து நாட்டை மீட்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கணக்கான திட்டங்களை அறிவித்தார். இ்ந்த 5 கட்டங்களாக திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் அறிவித்தார்.
அதில் முக்கியமாக “ கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். அவர்களுக்குச் சொந்த கிராமங்களில் வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்க மத்தியஅரசு முடிவு செய்தது. நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் இதற்காக ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இப்போது கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி என மொத்தம் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஒருமுறை மகாத்மா ஊரக வேலைவாயப்புத் திட்டத்தை விமர்சித்துப் பேசினார். அப்போது பேசுகையில் “ நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாகியும் காங்கிரஸ் கட்சி மக்களை கழிவுநீர் ஓடையை சுத்தப்படுத்தப்படுத்த அனுப்பியது. மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத்திட்டம் என்பது காங்கிரஸ் கட்சியின் தோல்வியின் வாழும் நினைவுச்சின்னம்” என விமர்சித்தார்
ஆனால் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார் என்பதை ராகுல்காந்தி சுட்டிக்காட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து ட்விட்டரில் ராகுல்காந்தி பதிவிட்ட கருத்தில் “ காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகையைக் காட்டிலும் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக பிரமதர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன்,காங்கிரஸின் தொலைநோக்குத் பார்வையான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை புரிந்துகொண்டார். அதை ஊக்கப்படுத்தவும் செய்கிறார்” எனத் தெரிவித்தார்
அதுமட்டும்லலாமல் மோடி யுடர்ன் ஆன் எம்என்ஆர்இஜிஏ(ModiUturnOnMNREGA) எனும் ஹேஸ்டேக்கையும், கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர்மோடி பதவி ஏற்றபின் பேசிய வீடியோவையும் ராகுல் காந்தி இணைத்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT