Published : 05 Aug 2015 10:06 AM
Last Updated : 05 Aug 2015 10:06 AM

ஏழுமலையானுக்கு ஷேர்களை காணிக்கையாக செலுத்தும் வசதி தொடக்கம்: 950 வங்கி கணக்குகளில் பல கோடி ரொக்கம், நகைகள்

திருப்பதி ஏழுமலையான் பெயரில் ஏற்கெனவே 950 வங்கி கணக்குகள் உள்ளன. இந்நிலையில், பக்தர்கள் நிறுவன பங்குகளை (ஷேர்) காணிக்கையாக வழங்குவதற்கு ஏதுவாக ஏழுமலையான் பெயரில் புதிய கணக்கு தொடங்கப்பட் டுள்ளது.

உலகின் பணக்கார கடவு ளாக விளங்கும் திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பணம், நகை, வீடு மற்றும் நில பத்திரங்கள், விலை உயர்ந்த கற்கள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

இதனால் ஏழுமலையானின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இதுதவிர, பக்தர்கள் உண்டியல் மூலம் செலுத்தும் காணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வருவாய் ஆண்டில் மட்டும் உண்டியல் மூலம் ரூ.905 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏழுமலை யான் பெயரில் பல்வேறு தேசிய வங்கிக் கிளைகளில் 950 வங்கிக் கணக்குகள் உள்ளன.

வட்டி வருமானம் ரூ.745 கோடி

இவைகளில் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டில் மட்டும் ரூ.6,200 கோடி உள்ளது. இதற்காக இந்த ஆண்டு ரூ.744.91 கோடி வட்டி கிடைத்துள்ளது. மற்ற சேவா டிக்கெட்டுகள் விற்பனை மூலம் இந்த ஆண்டு ரூ.660 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் உண்டியலில் தங்க நகைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்து கின்றனர். ஆண்டுக்கு சுமார் ஒரு டன் தங்க நகைகள் காணிக்கையாக செலுத்தப்படுகின்றன. இவற்றை மும்பையில் உள்ள மிண்ட்டுக்கு அனுப்பி பிஸ்கெட்டுகளாக மாற்றி அதை தேசிய வங்கிகளில் டெபாசிட் செய்கின்றனர்.

இவ்வாறு டெபாசிட் செய்யப் படும் தங்கத்துக்கு ஆண்டுதோறும் 1 சதவீதம் தங்கம் கூடுதலாக வழங்கப்படுகிறது. இவை மீண்டும் டெபாசிட் செய்யப்படுகிறது.

சில பக்தர்கள் தங்களுடைய ஷேர் சான்றிதழ்களையும் ஏழுமலை யானுக்கு காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

இதுவரை 1.8 லட்சம் ஷேர்கள் ஏழுமலையானுக்கு காணிக் கையாக வந்துள்ளன. இவற்றை ஏழுமலையான் பெயரில் மாற்று வதற்கு சிரமமாக இருந்தது.

இந்நிலையில், ஷேர்களை காணிக்கையாக செலுத்துவதற்கு வசதியாக ஸ்டாக் ஹோல்டிங் கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் (எஸ்எச்சிஐஎல்) மூலம் ஏழுமலையான் பெயரில் (எண்:1601010000384828) கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x