Published : 18 May 2020 07:58 AM
Last Updated : 18 May 2020 07:58 AM
கரோனா ஊரடங்கால் முடங்கியுள்ள இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க ‘சுயசார்பு பாரதம்’ என்ற பெயரில் ரூ.20 லட்சம்கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடிகடந்த 12-ம் தேதி அறிவித்தார்.
இத்திட்டம் தொடர்பாக நேற்றுவரை 5 கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாட்விட்டரில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் இன்றைய (நேற்றைய) அறிவிப்புகள் சுயசார்பு பாரதம் என்ற இலக்கை அடையபெருமளவு உதவும். சுகாதாரம், கல்வி, வர்த்தகம் ஆகிய துறைகளில் இது முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும். இதன்மூலம் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 100 நாள் திட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடிகூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம் ஏழைகளுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்றுநோய் மருத்துவமனை ஏற்படுத்துதல், ஆய்வகங்கள் மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்துதல் மற்றும் ஆய்வுகளை ஊக்குவிப்பதற்காக சுகாதாரத் துறைக்கான செலவை அதிகரிக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. இதனால் மருத்துவத் துறையில் இந்தியா முன்னிலை பெறும்.
பொதுத் துறை நிறுவனங்கள்கொள்கையை மறுவடிவமைத்தல், தொழில்புரிவதை மேலும் எளிமையாக்குதல், நிறுவனங்கள் சட்டத்தில் மாற்றம் ஆகியவை சுயசார்பு இந்தியாவை நோக்கிய,பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை காட்டுகிறது. இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT