Published : 16 May 2020 05:05 PM
Last Updated : 16 May 2020 05:05 PM
கரோனா இல்லாத உலகத்தை உருவாக்கவும், மக்கள் ஆரோக்கியமான உடல்நிலையைப் பெறவும் உலக நாடுகள் இணைந்து செயலாற்றுவது முக்கியம், அமெரிக்கா, இந்தியா இடையிலான நட்பு மேலும் வலுவடையும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வென்டிலேட்டர் வழங்கப்படும் என்று அறிவித்தமைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு சீனாவைக் காட்டிலும் அதிகரித்து 85ஆயிரத்தைக் கடந்துள்ளது கரோனா நோயாளிகளில் மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் சுவாசப் பிரச்சினை ஏற்படும்போது அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்க வென்டிலேட்டர்கள் பயன்படும். இதற்காக இந்தியாவுக்கு அன்பளிப்பாக வென்டிலேட்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் நேற்று தெரிவித்தார்.
அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ இந்தியாவில் உள்ள நமது நண்பர்களுக்காக வென்டிலேட்டர்களை அமெரிக்கா அன்பளிப்பாக வழங்க உள்ளது என்ற செய்தியை அறிவிப்பதில் பெருமையடைகிறேன்.
கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியாவுடனும் பிரதமர் மோடியுடனும் நாங்கள் துணைநிற்போம். தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதிலும் இணைந்து செயல்பட்டு, கண்ணுக்கத் தெரியா எதிரி கரோனா வைரஸைத் தோற்கடிப்போம்” எனத் தெரிவித்தார்.
அதிபர் ட்ரம்பின் ட்விட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில்” அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாம் எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து கரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்த்துப் போரட வேண்டும். இந்த உலகை கரோனா இல்லாமல் மாற்றவும்,
மக்கள் ஆரோக்கியமான உடல்நலத்தைப் ெபறவும் நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்படுவது அவசியம். இந்தியா-அமெரிக்கா நட்புறவுக்கு அதிபர் ட்ரம்பின் செயல் மேலும் வலு சேர்்க்கும்” எனத் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT