Published : 16 May 2020 04:41 PM
Last Updated : 16 May 2020 04:41 PM
அறிக்கை விடுவதுமட்டும்தான் அரசின் வேலையா, புலம்பெயர் தொழிலாளர்கள் நலனில் அக்கறை இல்லையா என்று உத்தரப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 24 தொழிலாளர்கள் பலியானதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்
உத்தரப்பிரதேசம் மாநிலம், அவுரா மாவட்டத்தில் இன்று அதிகாலை இரு சரக்கு லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் லாரியில் பயணித்த 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 36 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
இந்த விபத்தில் உயிரழந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவி்த்து பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார். பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் கூறியிருப்பதாவது:
அவுரியாவில் நடந்த விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் கேள்வியை எழுப்புகிறு. புலம்ெபயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலம் செல்ல ஏன் அரசு முறையான ஏற்பாடுகளைச் செய்யவில்லை. தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல ஏன் பேருந்துகளை இயக்கவில்லை.
எதையும் பார்க்க முடியாத சூழலில் அரசு இருக்கிறதா அல்லது, அனைத்தையும் அரசு பார்த்துக்கொண்டு, ஏதும் தெரியாதது போல் செயல்படாமல் இருக்கிறதா. அறிக்கைகளை வெளியிடும் பணி மட்டும்தான் அரசுக்கு இருக்கிறதா. விபத்தில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களி்ன் உடல்கள் மரியாதையுடன் அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சையளிக்க வேண்டும். பாதிக்கப்ட்டவர்கள்அனைவருக்கும் நிதியுதவி வழங்கிட வேண்டும்” எனத் தெரிவி்த்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரி்ல் பதிவிட்ட கருத்தில், “ அவுரியாவில் நடந்த விபத்தில் 24 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தது, காயமடைந்தது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது வருத்தங்களையும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT