Last Updated : 16 May, 2020 02:32 PM

 

Published : 16 May 2020 02:32 PM
Last Updated : 16 May 2020 02:32 PM

கரோனாவை தடுக்க நம்பிக்கை வீடியோ: 22 மொழிகளில் பேசி வெளியிட்ட குடிமைப்பணி அதிகாரிகள்

புதுடெல்லி

கரோனா பரவலை தடுப்பதான ஒரு நம்பிக்கை வீடியோ பதிவு சற்று முன் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய குடிமைப்பணியின் பல்வேறு அதிகாரிகள் 22 மொழிகளில் பேசி பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளனர்.

சீனாவில் உருவாகி பரவத் துவங்கிய கரோனா வைரஸ், சர்வதேச அளவில் அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் கரோனாவை தடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக முதன்முறையாக தேசிய அளவில் ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22 முதல் அறிவித்திருந்தார். அப்போது முதல் 3 முறை நீட்டிக்கப்பட்டு நாளை மார்ச் 17 வரை அது தொடர்கிறது.

இந்நிலையில், கரோனாவிற்கு அஞ்சாமல் அதை எதிர்த்து போராட மத்திய அரசு பொதுமக்களிடம் ஒத்துழைப்பு கோரி வருகிறது. இதே நோக்கில், ஒரு வீடியோவாக தமிழரும் மத்திய வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையராக பெங்களூருவில் பணியாற்றும் எஸ்.சுந்தர் ராஜன்.ஐஆர்எஸ் தயாரித்துள்ளார்.

தமிழக உள்ளிட்ட தென்னிந்திய அதிகாரிகளும் இந்த வீடியோவில் இடம் பெற்று பேசியுள்ளனர். தமிழரும் உத்திரப்பிரதேச மாநிலப் பிரிவின் ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர்.பி.முத்துக்குமாரசாமி, தமிழக வருவாய்துறையின் துணை ஆணையராக நாமக்கல்லில் பணியாற்றும் பிரயாதி சர்மா.ஐஆர்எஸ் ஆகியோரின் குரல்களும் பதிவாகி உள்ளன.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மியான்மாரின் இந்திய தூதரகத்தில் தற்போது முதல் செயலாளரான டாக்டர்.முத்துக்குமாரசாமி தொலைபேசியில் கூறும்போது, ‘பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவது இந்த வீடியோ பதிவின் நோக்கம்.

இதுபோன்ற நோக்கம் மீதான விழிப்புணர்வில் நம் நாட்டின் அனைத்து மொழிகளிலும் பேசி வெளியான முதல்வகையும் இது ஆகும். எனத் தெரிவித்தார்.

எட்டாவது அட்டவணைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளில் அதன் மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பேசியுள்ளனர். ‘Distanced by Corona’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ யூடியூப்பில் மெல்ல, மெல்ல வைரலாகி வருகிறது.

இந்தியாவின் ஐஏஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஏஆர்எஸ் உள்ளிட்ட பெரும்பாலான குடிமைப்பணிப் பிரிவுகளின் அதிகாரிகளின் ஒன்றிணைந்த முயற்சியில் இது உருவாகி உள்ளது. இதன் மீதான கருத்துக்களும் பல்வேறு சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x