Published : 16 May 2020 10:16 AM
Last Updated : 16 May 2020 10:16 AM
ஆக்ரா சிறைக்கைதியான 90 வயது முதியவர் ஒருவர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி மருத்துவக் கல்லூரியில் மரணமடைந்ததையடுத்து சிறையில் கரோனா பரவியிருக்கும் அச்சத்தில் அதிகாரிகள் பதற்றமடைந்துள்ளனர்.
கரோனாவுக்கு மரணமடைந்த முதியவரின் மருத்துவ அறிக்கை வெள்ளிக்கிழமையே கிடைத்தது. கரோனா மரணம் என்பதால் சிறையில் அவருடன் தொடர்பிலிருந்த 28 கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆக்ராவில் புதிதாக 9 பேருக்கு கரோனா பாசிட்டிவ் ஆன நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 798 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் நம்பிக்கையளிப்பதாக 485 என்று உள்ளது.
மாவட்ட நீதிபதி பி.என்.சிங், “283 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர், இதுவரை 10,377 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நகரில் 44 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன” என்றார்.
சிறை நிர்வாக டிஐஜி லாவ் குமார், “8 சிறை ஊழியர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். சிறைக்கைதிகள் அனைவருக்கும் வைரஸ் சோதனை விரைவில் செய்யப்படவுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT