Last Updated : 13 May, 2020 04:12 PM

 

Published : 13 May 2020 04:12 PM
Last Updated : 13 May 2020 04:12 PM

மருத்துவமனை ரெக்கார்டிலிருந்து  ‘மாயமான’ கேன்சர் நோயாளி இறப்பு- உடல் பிணவறையில் கண்டுபிடிப்பு-உறவினர்கள் கண்ணீர்

அகமதாபாத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேன்சர் நோயாளி ஒருவரின் பெயர் பதிவேட்டிலிருந்து மாயமாகியிருந்தது, ஆனால் அவர் இறந்து போய் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

மே 5ம் தேதி முதல் இந்த கேன்சர் நோயாளியின் நிலவரத்தை மருத்துவமனை நிர்வாகம் மறைத்துள்ளதாக குடும்பத்தினர் வேதனியுடன் குற்றம்சாட்டினர். இதோடு மரணத்தையும் மறைத்து விட்டனர், 5 நாட்களுக்கு முன்பாக இறந்த நோயாளி பிணவறையில் வைக்கப்பட்ட கொடூரம் பற்றி தெரியவந்துள்ளது.

மருத்துவமனை மார்ச்சுவரியில் இவரது சடலத்தைப் பார்த்த பிறகே உறவினருக்கு என்ன நடந்தது என்பதே தெரியவந்த கொடுமை நிகழ்ந்துள்ளது.

இறந்த நோயாளி போர்பந்தரைச் சேர்ந்தவர் வயது 54. , மே 4ம் தேதி தன் தந்தைக்கு கரோனா டெஸ்ட் எடுக்க மருத்துவமனை அதிகாரிகள் அறிவுறுத்தியதாக மகன் தெரிவித்தார்.

“என் தந்தையின் சாம்பிள் டெஸ்ட்டுக்குச் சென்றது, மே 4ம் தேதி என் தந்தை ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். தந்தையின் சாம்பிள் டெஸ்ட் முடிவுகளை தெரிவிப்பதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் இன்று வரை ஒரு அழைப்பும் அவர்களிடத்திலிருந்து வரவில்லை” என்றார்.

தினமும் தான் மருத்துவமனைக்குச் சென்று வந்ததாகவும், தன் தொலைபேசி எண்ணையும் கொடுத்து விட்டு வந்ததாகவும் கூறிய அவர் மருத்துவமனை ஒரு தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை, கடைசியில் பிணமாகப் பார்க்க நேரிட்டது என்கிறார் அவரது மகன்.

மேலும் நோயாளிகள் பதிவேட்டில் தன் தந்தையின் பெயர் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் ஒரு பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இறந்தவர் காங்கிரஸ் தொண்டர் என்பதால் அவர் மகன் காங்கிரஸ் பிரமுகர் அர்ஜுன் மோத்வாடியாவை அணுகி உதவி கேட்டுள்ளார்.

காங்கிரஸ் பிரமுகர் கூறும்போது, “கேன்சர் நோயாளி வார்ட் எண் 3-ல் அனுமதிக்கப்பட்டார், ஐசியுவில் அல்ல என்று தெரிவித்தனர், ஆனால் வார்ட் 2-லும் அவர் இல்லை” என்றார்..

”என் தந்தை மே 8ம் தேதி இறந்ததாக கூறினர். ஆனால் இன்று வரை என் தந்தை மரணம் பற்றி மருத்துவமனை தகவல் அளிக்கவில்லை. ஆனால் நெருக்கடி கொடுத்ததால் இன்று என் தந்தையை தேடினர்” என்றார்.

காங்கிரஸ் பிரமுகர் மோத்வாடியா, “கரோனா நெகட்டிவ் என்றால் கேன்சர் வார்டுக்கு அவரை ஷிஃப்ட் செய்ய வேண்டியதுதானே. கால்நடை வளர்ப்பவர் கூட தன் மந்தையில் எவ்வளவு இருந்தன என்பதை கணக்கு வைத்துக் கொள்வார். குஜராத் மருத்துவ அமைப்பு முறை இந்த லட்சணத்தில் உள்ளது, இதுதான் மாநிலத்திலேயே பெரிய அரசு மருத்துவமனை” என்று கடுமையாக விமர்சித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x