Published : 13 May 2020 02:54 PM
Last Updated : 13 May 2020 02:54 PM
தப்லீக் அமைப்பின் தலைவரான மவுலானா சாத் தொடர்பான வழக்கு விசாரணையை மே 28-ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
டெல்லியில் நடைபெற்ற தப்லீக்கின் மதமாநாட்டிற்கு பல வெளிநாட்டினர் கரோனா தொற்றுடன் கலந்து கொண்டனர். இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலுக்கு இதுவும் காரணமாக அமைந்ததாக புகார் கூறப்படுகிறது.
இதையடுத்து சர்சைக்குள்ளாகி கவனத்திற்கு வந்த தப்லீக் அமைப்பின் மீது டெல்லி காவல்துறை பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்தது. விசாரணைக்காக, தப்லீக் அமைப்பின் தலைவரான மவுலானா சாத் உள்ளிட்ட ஆறு நிர்வாகிகளுக்கும் இதுவரை 4 நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கானப் பதில்களில் திருப்தி அடையாத டெல்லி போலீஸார் அதில், மவுலானா சாத்தின் மூன்று மகன்களில் ஒருவரான மவுலானா முகம்மது யூசுப்பை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்.
கடந்த வாரம் டெல்லியில் இந்த விசாரணை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. இதில் வெளியான பல தகவல்களின் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெறுகிறது.
இந்தநிலையில் தப்லீக் அமைப்பின் தலைவரான மவுலானா சாத் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது டெல்லி போலீஸார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு சரியான முறையில் விசாரணை செய்யப்படுவதால் அதனை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மே 28-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT