Last Updated : 13 May, 2020 02:12 PM

 

Published : 13 May 2020 02:12 PM
Last Updated : 13 May 2020 02:12 PM

கோவிட்-19 லாக் டவுன்: பெரும்பாலான கிராமங்களில் பாதி உணவுதான்... பெருகும் பற்றாக்குறை- குக்கிராமங்களில் இன்னும் மோசம்: ஆய்வில் தகவல்

பிரதிநிதித்துவப் படம்.

12 மாநிலங்களில் சுமார் 5,000 வீடுகளுக்கும் கூடுதலான குடும்பங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் கரோனா லாக்டவுன் காலமான தற்போது பாதி வீடுகளில் உணவு எடுத்துக் கொள்வதில் போதாமை தெரியவந்துள்ளது. அதாவது உணவு பற்றாக்குறை உள்ளது தெரியவந்துள்ளது

‘கோவிட் 19- உருவாக்கிய லாக்டவுன் - இந்தியாவுன் ஊரகப் பகுதிகள் எப்படி சமாளிக்கின்றன’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது

இதில் 50% வீடுகள் தங்களின் வழக்கமான உணவு முறைகளை பாதியாகக் குறைத்துள்ளது, அதாவது வழக்கமாக 2 வேளை உணவு என்றால் அது லாக் டவுன் காலக்கட்டத்தில் பாதியாகக் குறைந்துள்ளது. 68% வீடுகலில் முழு உணவு அல்லாமல் காய்கறிகள் இல்லாமல் சாப்பிடுவது போன்ற குறைபடு உணவு முறையே மேற்கொள்ளப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

ஆய்வு செய்த வீடுகளில் 84% வீடுகளுக்கு பொது விநியோக முறையின் கீழ் உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. 37% வீடுகளுக்கு வீட்டு ரேஷன் கிடைக்கிறது கிராமங்களில் 24% வீடுகள் வெளியிலிருந்து கடன் பெற்ற உணவுப்பொருள்தான், 12% வீடுகளுக்கு இலவச உணவு கிடைக்கிறது.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் வெபினாரில் புதனன்று வெளியிடப்பட்டது.

கரீப் உணவு ஸ்டாக்குகளை நம்பியே பல வீடுகள் உள்ளன, தற்போது அந்த உணவுக்கையிருப்பும் வெகு வேகமாகக் குறைந்து வருகிறது.

கரீப் 2020க்கான தயாரிப்பு மிகவும் குறைவாக உள்ளது, விதை வழங்கல் மற்றும் கடன்வழங்கலுக்கான தேவை அதிகரித்துள்ளது.

பெரிய அளவிலான புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னும் சொந்த ஊர் திரும்பாதபோதே இந்த நிலமை. அவர்களும் திரும்பினா உணவுக்கையிருப்பு வேகு வேகமாகக் குறைந்து விடும் என்கிறது இந்த ஆய்வு.

“லாக்டவுன் மற்றும் வதந்திகள் கால்நடை வளர்ப்பை பெரிதும் பாதித்துள்ளது. எனவே செலவுகளையும் உணவு அளவைக் குறைப்பதுமாக அங்கு நடந்து கொண்டிருக்கிறது.

அஸாம், பிஹார், சத்திஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உ.பி., மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குடிமைச் சமூக அமைப்புகளான பிரதான், சமூக முன்னேற்றத்துக்கான செயல், பெய்ஃப், இந்திய ஊரக அடித்தளத்தின் மாற்றம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளன,

வெபினாரில் பேசிய பிரதான் அமைப்பின் திட்ட இயக்குநர் மது கேத்தன், இந்த ஆய்வு செல்லமுடியக் கூடிய கிராமங்களில் மட்டுமே நடத்தப்பட்டது, குக்கிராமங்களில் நிலமை இன்னும் மோசமாகவே இருக்கிறது, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x