Last Updated : 13 May, 2020 11:12 AM

 

Published : 13 May 2020 11:12 AM
Last Updated : 13 May 2020 11:12 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,281- கடந்த 24 மணி நேரத்தில் 3525 புதிய தொற்றுக்கள்- 2,415 பேர் பலி

இந்தியாவில் மே-13ம் தேதி காலை 9.00 மணி நிலவரப்படி, கரோனா பாதிப்பு 74 ஆயிரத்தை கடந்து 74,281 என்று அதிகரித்துள்ளது. 2,415 பேர் கரோனாவுக்கு சிகிச்சைப் பலனின்றி பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,756 லிருந்து 74,281 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 2,293 லிருந்து 2,415 ஆக உயர்ந்துள்ளது.

பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 24,386 ஆக அதிகரித்துள்ளது. 47,480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,525 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலவாரியாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோர் விவரம்:

மஹாராஷ்டிரா - 24,427 பேர் பாதிப்பு; பலி எண்ணிக்கை 921
குஜராத் - 8,903 பாதிப்பு - பலி எண்ணிக்கை-537
தமிழகம் - பாதிப்பு எண்ணிக்கை 8,718 பலி எண்ணிக்கை- 61

மற்ற மாநிலங்கள் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை விவரம்
டெல்லி - 7,639 - 86
ராஜஸ்தான் - 4,126 - 117
மத்திய பிரதேசம் - 3,986 - 225
உத்தர பிரதேசம் - 3,664 - 82
மேற்கு வங்கம் -2,173 - 198
ஆந்திரா - 2,090 - 46
பஞ்சாப் - 1,914 - 32
தெலுங்கானா - 1,326 - 32
காஷ்மீர் - 934 - 10
கர்நாடகா - 925 - 31
பீஹார் - 831 - 06
ஹரியானா - 780 - 11
கேரளா -524 04
ஒடிசா - 437- 03
சண்டிகர் - 187 - 03
ஜார்க்கண்ட் - 172 - 03
திரிபுரா- 154 - 0
உத்தரகாண்ட் - 69 - 1
அசாம் - 65 - 02
ஹிமாச்சல பிரதேசம் - 65 - 02
சத்தீஸ்கர் - 59 - 0
லடாக் - 42 - 0
அந்தமான் - 33 - 0
மேகாலயா- 13- 01
புதுச்சேரி- 13 - 0
கோவா- 07 - 0
மணிப்பூர் - 02 - 0
தாதர் நாகர் ஹவேலி-1-0
அருணாச்சல பிரதேசம் - 01 - 0
மிசோரம் - 01 - 0

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x