Published : 12 May 2020 07:21 PM
Last Updated : 12 May 2020 07:21 PM
ஏதோ ஹாலிவுட் பட ஷூட்டிங் போல் கர்நாடகா நெடுஞ்சாலையில் பாஜக எம்.எல்.ஏ.மகன் ஒருவர் லாக் டவுன் விதிமுறைகளையெல்லாம் கொஞ்சம் கூட மதிக்காமல் முகக்கவசம் இல்லாமல் குதிரையில் சென்ற கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
எம்.எல்.ஏ-வான சி.எஸ். நிரஞ்சன் குமார் மகன் புவன் குமார் என்பவர் தேசிய நெடுஞ்சாலையில் முகக்கவசம் இல்லாமல் வலம் வந்தது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஊரடங்கெல்லாம் சாமானிய மக்களுக்கும் ஏழைகளுக்கும்தானா, மற்றவர்கள் சுதந்திரமாகத் திரியலாமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தச் சட்ட மீறல் குறித்து புவன் குமார் மீது எந்த ஒரு வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
சாம்ராஜ் நகர் எஸ்.பி இது விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக எம்.எல்.ஏ.வும் எதுவும் சொல்லவில்லை.
கர்நாடகாவில் கரோனா எண்ணிக்கை 900-த்தை கடந்தது. புதிதாக 42 பேருக்கு கரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. ஹசன் பகுதியில் இதுவரை தொற்று இல்லாத நிலையில் செவ்வாயன்று 5 பேருக்கு கரோனா தொற்றியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கரோனா தொற்று கொஞ்சம் தீவிரமாகி வரும் நிலையில் லாக் டவுன் விதிகளை மீறி இவர் குதிரையில் வேகமாக வலம் வந்தது சமூக வலைத்தளவாசிகளின் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT