Published : 10 May 2020 02:06 PM
Last Updated : 10 May 2020 02:06 PM
கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பாதிக்கப்பட்ட நடுத்தர, சிறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக கூடுதலாக 10 முதல் 15 சதவீதம் செயல்பாட்டுக்கடன் தொகையை வங்கிகள் வழங்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது வங்கிகளில் கடன் பெற்ற சிறு, நடுத்தர நிறுவனங்களுக்குத் தங்களின் செயல்பாட்டுக்கடனிலிருந்து 10 சதவீதத்ைத ஊழியர்களின் ஊதியத்துக்காக வழங்குவதாக வங்கிகள் தெரிவித்துள்ளன. இந்த சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் மத்தியஅரசு ஆலோசித்து வருகிறது. அதாவது கூடுதலாக 10முதல் 15 சதவீதம் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது
லாக்டவுன் தொடங்கியதிலிருந்து கடந்த 2 மாதங்களாக சிறு, நடுத்தர நிறுவனங்கள் எந்த விதமான செயல்பாடும் இல்லாமல் முடங்கியுள்ளன. ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் நிறுவனங்களிடம் பணம் இல்லை, இதைக் கருத்தில்கொண்டு இந்த திட்டத்ைத செயல்படுத்த அரசு தீவிரமாக இருந்து வருகிறது
நாட்டில் வேளாண் துறைக்கு அடுத்தார்போல் அதிகமானமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக சிறு,நடத்தர நிறுவனங்கள் துறைஇருக்கிறது. ஆதலால், இந்த இக்கட்டான நேரத்தில் அந்த நிறுவனங்கள் கடன் உறுதியளிப்புத் திட்டத்தை செயல்படுத்தினால் அவற்றைக் காக்க முடியும் என்று தீர்மானித்து மத்தியஅரசு செயல்பட்டு வருகிறது
லாக்டவுன் தொடங்கியதிலிருந்து சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு இதுவரை ரூ.42 ஆயிரம் கோடி கடன் அவசர கடன் வசதி திட்டத்தின் கீழ்வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நிறுவனங்களின் தங்களின் செயல்பாட்டுக்கடனிலிருந்து 10 சதவீதம் பணத்தை கூடுதலாகப் பெற்றுக்கொள்ள முடியும், அதிகபட்சமாக ரூ.200 கோடி வரை பெறலாாம். அந்த வகையில் இதுவரை வங்கிகள் ரூ.27,426 கோடிக்கு கடனை சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளன.
இதுவரை 10 லட்சம் சிறு, நடுத்தர நிறுவனங்கள், 6,248 கார்ப்பரேட் நிறுவனங்கள் பலன் பெற்றுள்ளன. அதேநேரத்தில் ஏற்கனவே பெற்றகடனுக்கான தவணைகளை செலுத்துவதில் ரிசர்வ்வங்கியி்ன் விதிமுறைப்படி 3மாத அவகாசமும் வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT