Published : 08 May 2020 07:26 PM
Last Updated : 08 May 2020 07:26 PM
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை வழித்தடத்தில் தர்ச்சுலாவிலிருந்து லிபுலேக் (சீன எல்லை) வரை சாலைப் பணிகள் நிறைவடைந்ததற்கு மத்திய சாலைவழி போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கைலாஷ்-மானசரோவர் யாத்திரையை மேற்கொள்ளும் புதிய வழியாகவும் எல்லைப்பகுதியை இணைக்கும் வழியாகவும் உள்ள தர்ச்சூலாவில் (உத்தரகண்ட்) இருந்து லிப்புலேக் (சீனா எல்லை) வரையிலான இணைப்பு சாலையை பாதுகாப்பு மந்திரி திரு ராஜ்நாத் சிங் இன்று நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். மேலும் திரு ராஜ்நாத் சிங் காணொலி காட்சி மூலம் பித்தோராகரில் இருந்து கூஞ்சி வரையிலான பல வாகனங்களின் தொகுப்பு பயணத்தையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
புகழ்பெற்ற கைலாஷ் - மனாசரோவர் யாத்திரை வழித்தடத்தில், தர்ச்சுலாவிலிருந்து லிபுலேக்( சீன எல்லை) வரை சாலைத்தொடர்புப் பணியை நிறைவு செய்த எல்லை சாலைகள் அமைப்பின் முயற்சியை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டியுள்ளார்.
எல்லைப்புறக் கிராமங்கள் முதன்முதலாக சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளதாக திரு. கட்கரி கூறினார். இதனால், கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்கள் மிகச் சிரமமான 90 கி.மீ பயணத்தைத் தவிர்த்து சீன எல்லை வரை தற்போது வாகனங்கள் மூலம் செல்ல முடியும் என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT