Published : 08 May 2020 07:27 AM
Last Updated : 08 May 2020 07:27 AM
விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய (என்.டி.ஆர்.எப்.) அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் என்.டி.ஆர்.எப். இயக்குநர் பிரதான் பேசும்போது, "விசாகப்பட்டினம் தொழிற்சாலையில் இருந்து மிகக் குறைவான அளவே விஷவாயு கசிந்துள்ளது. தற்போது அந்தப் பகுதியில் விஷ வாயு கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. என்.டி.ஆர்.எப். குழுவினர் விசா கப்பட்டினத்துக்கு சென்றுள்ளனர். நிலைமை சீரான பிறகே அவர்கள் திரும்புவார்கள்" என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "விசாகப்பட்டினம் விஷ வாயு கசிவு துரதிஷ்டவசமானது. ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். என்.டி.ஆர்.எப். மற்றும் புனேவை சேர்ந்த தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மைய (நீரி) நிபுணர்கள் விசாகப்பட்டினத்தில் முகாமிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்" என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி ட்விட்டரில் வெளி யிட்ட பதிவில், "விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். விசாசகப்பட் டினத்தில் அனைவரின் பாதுகாப் புக்காகவும், நலனுக்காகவும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட பல்வேறு தலைவர்கள், விஷவாயு கசிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங் கல் தெரிவித்துள்ளனர்.
பாதிப்பை குறைக்கும் ரசாயனம்
விசாகப்பட்டினத்தில் காற்றில் கலந்துள்ள விஷவாயுவின் பாதிப்பை குறைக்க 'பாரா-டெர்டி யரி பியூட்டைல் கேட்டசோல்" (பி.டி.பி.சி.) என்ற ரசாயனத்தை பயன்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த ரசாயனம் குஜராத்தின் வாபி நகரில் உள்ள தொழிற் சாலையில் மட்டுமே தயாரிக்கப்படு கிறது. அங்கிருந்து முதல்கட்டமாக 500 கிலோ பி.டி.பி.சி. ரசாயனத்தை விசாகப்பட்டினத்துக்கு கொண்டு வர ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து குஜராத் முதல்வர் அலுவலக செயலாளர் அஸ்வினி குமார் கூறும்போது, "ஆந்திர அர சின் வேண்டுகோளை ஏற்று பி.டி.பி.சி ரசாயனத்தை வான் வழியாக விசாகப்பட்டினத்துக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT