Published : 07 May 2020 04:45 PM
Last Updated : 07 May 2020 04:45 PM
நீதிபதி தீபக் குப்தா நேற்று வீடியோ கான்பரன்சிங் வழியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஓய்வு பெற்ரார். அவர் நம் நாட்டின் சட்ட அமைப்பு பணக்காரர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களுக்குச் சாதகமாகவே உள்ளது என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் நீதியமைப்பின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதனை சரி செய்வதே அவர்களது கடமை. இந்தியாவிலேயே வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரியாவிடை பெற்ற முதல் நீதிபதியாகிறார் தீபக் குப்தா.
“நம் சட்டங்களும், சட்ட அமைப்பும் மொத்தமாக பணக்காரர்களுக்கு அதிகார வர்க்கத்திற்கும் சாதமாக செய்யப்பட்டுள்ளது. பணக்காரர் அல்லது அதிகாரபலமிக்க ஒருவர் சிறையில் இருக்கிறார் என்றால் அவர் தன் மீதான விசாரணை கைவிடப்படும் வரை உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றங்களுக்கும் முறையீடு செய்து கொண்டேயிருப்பார்கள். இதன் மூலம் ஏழைகளின் வழக்குகள் தள்ளிப்போய்க் கொண்டேயிருக்கின்றன. ஏனெனில் ஏழைகள் மேல் கோர்ட்டில் முறையிட முடியாது.
மாறாக ஜாமீனில் இருக்கும் ஒரு பணக்காரன் ஒரு சிவில் வழக்கை தாமதிக்க வேண்டுமெனில் அவர் உயர் நீதிமன்றங்களை அணுகியபடியே இருப்பார் இதன் மூலம் நீதி நடைமுறைகளைத் தாமதப்படுத்திக் கொண்டே இருப்பார். அதாவது எதிராளி வெறுப்படைந்து கைவிடும் வரை தொடர்ந்து முறையிட்ட வண்ணம் இருப்பார், ஏனெனில் இவர் பணக்காரர் இதனை செய்ய முடியும் என்பதாலேயே ” என்றார் தீபக் குப்தா.
“நாடு நீதித்துறை மீது ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆனால் நாம் என்ன செய்கிறோம்?நாம் நம் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதனை சரியான முறையில் டீல் செய்ய வேண்டும். எந்தச்சூழ்நிலையிலும் நீதித்துறையின் நேர்மை தூர்ந்து போகுமாறு செய்யக் கூடாது.
நான் பார்த்தவரையில் வழக்கறிஞர்கள் அரசியல், கருத்தியல்கள் சார்ந்து வாதிடுகின்றனரே தவிர சட்டத்தின் மீது வாதிடுவதில்லை. உங்கள் கட்சிக்காரருக்காக சட்டத்தின் மீது வாதாடுங்கள் மற்ற விஷயங்களுக்காக அல்ல.
இது போன்ற நெருக்கடி தருணங்களில் உங்களுடையதோ அல்லது என்னுடைய அரசியல் சட்ட உரிமைகள் மீறப்படுவதில்லை ஏழை மக்கள் ஏழைகளிலும் ஏழைமக்களின் உரிமைகளே மீறப்படுகின்றன. இவர்களுக்காக குரல் கொடுக்க ஆளில்லையெனில் அவர்கள் வாதையை அனுபவிக்கின்றனர். இவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் வந்தால் கோர்ட் அவர்களின் குரல்களை மதிக்க வேண்டும். பொறுமையாக அவர்கள் குரல்களைக்கேட்டு ஏதாவது நன்மை செய்ய முடிந்தால் தயவு செய்து செய்யுங்கள். ” என்றார்
இவர் திரிபுரா மாநில உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்ற நீதிபதியாக இவர் பணியாற்றிய காலத்தில் 2017-ல் வழக்கு ஒன்றில் உரிய வயது வராத மனைவியுடன் பாலியல் உறவு சம்மதத்துடன் வைத்துக் கொண்டாலும் அது பலாத்காரமே என்று அளித்த தீர்ப்பு பிரபலமானது.
அதே போல் குடிமக்களுக்கு போராட்டம் நடத்த உரிமையுண்டு என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT