Published : 07 May 2020 04:39 PM
Last Updated : 07 May 2020 04:39 PM

ராணுவப்  பொறியியல் சேவைப் பணியில் 9,304 பதவியிடங்கள் குறைப்பு: ராஜ்நாத் சிங் ஒப்புதல்

புதுடெல்லி

ராணுவப் பொறியியல் சேவைப் பணியில் அடிப்படை மற்றும் தொழிலியல் பணியாளர்களுக்கான 9,304 பதவியிடங்களை அகற்றுவதற்கான, முதன்மைத் தலைமைப் பொறியாளரின், ராணுவ பொறியியல் சேவைப் பணிகள் (எம் ஈ எஸ்) திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

லெப்டினண்ட் ஜெனரல் ஷெகட்கர் தலைமையிலான நிபுணர் குழுவினர், ஆயுதப் படையின் ராணுவப் பொறியியல் சேவைப் பணிகளில் போர்த்திறனை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு செலவினத்தை மறுசமன் செய்வதற்கான நடவடிக்கைகள் சார்ந்து செய்த பரிந்துரைகளை ஏற்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எம்.ஈ.எஸ்-ன் பணிகளில் ஒரு பகுதியை துறையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களே செய்துகொள்வது, இதரப்பணிகளை வெளியிலிருந்து தருவிக்கப்பட்டவர்களைக் கொண்டு செய்துகொள்வது என்கிற வகையில் சிவில் பணியாளர் தொகுதியை மாற்றியமைப்பது என்பது இந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளில் ஒன்று ஆகும்.

இது குறித்த பரிந்துரைகள் அடிப்படையிலும், எம் ஈ எஸி-ன் முதன்மைத் தலைமைப் பொறியாளர் சமர்ப்பித்த திட்டத்தின் அடிப்படையிலும், எம் ஈ எஸி-ல் மொத்தமுள்ள 13,157 காலிப் பணியிடங்களில் 9,304 பணியிடங்களை அகற்றிவிட பாதுகாப்பு
அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

வருங்காலத்தில் சிக்கலான பணிகளை, திறம்படவும், சிக்கனமாகவும் கையாள, குறைந்த பணியாளர்களுடன் எம் ஈ எஸ்-ஐ திறம்பட்ட அமைப்பாக மாற்றியமைப்பது இந்தப் பரிந்துரைகளின் நோக்கமாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x