Published : 07 May 2020 12:02 PM
Last Updated : 07 May 2020 12:02 PM
விசாகப்பட்டிணத்தின் கோபால்பட்டிணத்தில் உள்ள வேங்கடாபுரம் கிராமத்தில் எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட ரசாயன வாயுக்கசிவு 3 கிமீ சுற்றுப்பரப்புக்குப் பரவி சுமார் 5 கிராமங்களைப் பாதித்ததில் 6 வயது சிறுமி உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.
ஆந்திர மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.வி.சுதாகர் பலி எண்ணிக்கையை உறுதி செய்தார். நோயாளிகள் 200க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் பொறியியல் நிறுவனமான எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனம் விஷவாயுவான ஸ்டைரீன் வாயுவைப் பயன்படுத்துகிறது. இது தொடர் வெடிப்புகளையும் ஏற்படுத்தியிருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மக்கள் சிலர் வீட்டை விட்டு பீதியில் வெளியில் வர பல இடங்களில் மக்களை வீட்டை உடைத்து மக்களை வெளியே கொண்டு வர நேரிட்டது. சுமார் 2,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி-முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு:
விசாகபட்டிணம் விஷவாயுக் கசிவு தொடர்பாக பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியைத் தொடர்பு கொண்டு நிலமைகளை விசாரித்ததோடு அனைத்து உதவிகளுக்கும் உறுதி அளித்துள்ளார்.
ஏற்கெனவே மீட்பு நடவடிக்கைகள் பற்றி பிரதமர் கேட்க முதல்வர் ரெட்டி அவருக்கு விளக்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT