Published : 07 May 2020 11:35 AM
Last Updated : 07 May 2020 11:35 AM
வாஷிங்டன்: சனிக்கிழமை முதல் 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு அமெரிக்காவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வரும் பணி தொடங்கவிருக்கிறது.
அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை படு பயங்கரமாக 74,807 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 12,63,197 ஆக அதிகரித்துள்ளது.
கணினி மூலம் குலுக்கல் முறையில் இந்தியாவுக்கு அனுப்பப்படும் இந்தியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த விமானங்களில் குறைந்த அளவே இருக்கைகள் இருக்கும் என்பதால் 7 விமானங்கள் வரும் சனிக்கிழமை முதல் இயங்கத் தொடங்குகிறது
திங்களன்று மே 7-ம் தேதி முதல் அமெரிக்காவில் தேங்கியுள்ள இந்தியர்களை படிப்படியாக அழைத்து வரும் திட்டங்களை அறிவித்தது. ஏர் இந்தியா மே 7 முதல் 13ம் தேதி வரை 64 விமானங்களை இயக்குகிறது என்று தெரிவித்தது. இதன் மூலம் சுமார் 15,000 இந்தியர்கள் திரும்புகின்றனர் என்று மத்திய வான்வழிப்போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செவ்வாயன்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மே 9ம் தேதி முதல் 7 வர்த்தகசேவை விமானங்கள் மூலம் ஏர் இந்தியா அமெரிக்காவிலிருந்து இந்தியர்களை அழைத்து வரவிருக்கிறாது. இந்த புதிய அறிவிக்கை புதன் இரவு மேற்கொள்ளப்பட்டது.
“விமானங்களில் இருக்கைகள் குறைவாகத்தான் இருகும் என்பதால் அவசரத் தேவை உள்ளவர்கள், அதாவது மருத்துவ அவசர நிலை, மாணவர்கள், கருத்தரித்த பெண்கள், குடும்பச் சிக்கல் காரணமாக திரும்ப வேண்டியவர்கள், முதியோர் அல்லது வீசா காலக்கட்டம் முடியும் நபர்கள் ஆகியோருக்கு இந்தியா வருவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது” என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
முதல் விமானம் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பை மற்றும் ஹைதராபாத்துக்கு மே 9ம் தேதி பறக்கும். இரண்டாவது விமானம் புதுடெல்லி மற்றும் பெங்களூருவுக்கு மே 13ம் தேதி பறக்கும் என்று இந்திய தூதரகம் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்ள்ளது.
விமானக் கட்டணங்கள் இகானமி வகுப்புக்கு அமெரிக்க டால்ர் 1362, அதாவது ரூ.1 லட்சத்துக்கும் அதிகம், பிசினஸ் வகுப்புக்கு 3722 டாலர்கள் அதாவது 2 லட்ச ரூபாய்களுக்கும் அதிகம். முதல் வகுப்புக் கட்டணம் 5612 டாலர்கள் அல்லத் ரூ.4 லட்சத்துக்கும் அதிகம் இருக்கும்
இது ஏர் இந்தியா கட்டணம், மாற்றத்துக்குரியது. உள்நாட்டு பயணத்துக்கு தனிக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மே 10ம் தேதி மும்பை மற்றும் அகமதாப்பாத்திற்கு ஏர் இந்தியா நெவார்க் மற்றும் நியுஜெர்சியிலிருந்து 2 விமானங்களை இயக்குகிறது.
அதே போல் சிகாகோவிலிருந்து சென்னை மற்றும் மும்பைக்கு மே 11ம் தேதி 2 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
மே 15ம் தேதி சிகாகோவிலிருந்து டெல்லி, ஹைதராபாத்துக்கு 2 விமானங்கள், மற்றும் மே 12ம் தேதி வாஷிங்டன் டி.சியிலிருந்து டெல்லி மற்றும் ஹைதராபாத்துக்கு ஒருவிமானம் இயக்கப்படுகிறது.
விமானம் ஏறுவதற்கு முன்பு மருத்துவ சோதனை கட்டாயம் நடைபெறும். நோய்க்குறி குணங்கள் இல்லாதவர்கல் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்தியா வந்திறங்குபவர்கள் ஆரோக்கிய சேது செயலியை தரவிறக்கம் செய்து பதிவு செய்ய வேண்டும், இங்கும் கரோனா பரிசோதனைக்குப் பிறகே அனுப்பப்படுவார்கள்.
இந்தியா வந்த பிறகு 14 நாட்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும். 14 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கோவிட்-19 டெஸ்ட் எடுக்கப்பட்டு சாத்தியமாகக்கூடிய மருத்துவ நடைமுறைகளின் படி அவரவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT