Published : 07 May 2020 10:37 AM
Last Updated : 07 May 2020 10:37 AM
நாட்டில் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1,783 ஆக அதிகரித்துள்ளது, பாதிப்பு எண்ணிக்கை 52,952 ஆக அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் 89 பேர் கரோனாவுக்கு பலியகியுள்ளனர்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 3,561 புதிய கரோனா தொற்று கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 15,266 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுவதாவது:
புதன் கிழமை காலையிலிருந்து 89 பேர் பலியாகியுள்ளனர். இதில் 34 பேர் மகாராஷ்ட்ராவிலும், 28 பேர் குஜராத்திலும், 9 பேர் ம.பி.யிலும், முறையே 4 பேர் உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்திலும் 3 பேர் ராஜஸ்தானிலும் முறையே 2 பேர் பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டிலும், டெல்லி, ஹரியாணா, ஒரிசாவில் முறையே ஒருவரும் பலியாகியுள்ளனர்.
1,783 கரோனா பலிகளில் மகாராஷ்ட்ரா 651 பலிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குஜராத்தில் 396, மத்தியப் பிரதேசத்தில் 185, மேற்கு வங்கத்தில் 144, ராஜஸ்தானில் 92, டெல்லியில் 65, உ.பி.யில் 60, ஆந்திராவில் 36 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்
தமிழகத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிக்க தெலங்கானா, கர்நாடகாவில் முறையே 29 பேர் பலியாகியுள்ளனர். பஞ்சாபில் 27, ஜம்மு காஷ்மீரில் 8, ஹரியாணாவில் 7, கேரளா, பிஹாரில் முறையே 4 பேர்களும், ஜார்கண்டில் 3 பேர், ஒடிசா, இமாசலத்தில் முறையே 2 பேரும் பலியாகியுள்ளனர்.
மேகலயா, சண்டிகர், அசாம், உத்தராகண்டில் தலா ஒருவரை கரோனா பலி வாங்கியுள்ளது.
உறுதி செய்யப்பட்ட கரோனா தொற்றுக்கள்:
மகாராஷ்ட்ரா: 16,758
குஜராத் 6,625
டெல்லி 5532
தமிழ்நாடு 4,829
ராஜஸ்தான், 3,317
ம.பி. 3,138
உ.பி. 2,298
ஆந்திரா 1,777
பஞ்சாப் 1516
மேற்கு வங்கம் 1,456
தெலங்கானா 1107
ஜம்மு காஷ்மீர் 775
கர்நாடகா 693,
ஹரியாணா 594
பிஹார் 542
கேரளா 503
ஒடிசா 185
ஜார்கண்ட் 127
சண்டிகர் 120
உத்தராகண்ட் 61
சத்திஸ்கர் 59
அஸாம் 45
இமாச்சல் 45
திரிபுரா 43
லடாக் 41
அந்தமான் நிகோபார் தீவுகள் 33
மேகாலயா 12
புதுச்சேரி 9
கோவா 7
மணிப்பூர் 2
மிஜோரம், அருணாச்சல், தாடர் மற்றும் நாகர் ஹவேலி தலா 1 என்று கரோனா தொற்று நிலவரங்கள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT