Published : 06 May 2020 01:01 PM
Last Updated : 06 May 2020 01:01 PM
மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் உள்ள குண்டூர் பகுதி கிராம மக்கள் கடையை மூடக் கோரி திறக்கப்பட்ட மதுபானக் கடை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் மூன்றாவது லாக்டவுன் தொடங்கும்போது கரோனா வைரஸ் குறைவாக பாதிக்கப்பட்ட பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. அவ்வகையில் சில மாநிலங்களிலும் அரசு மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. எனினும் மதுக்கடை திறப்பதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கோவிட் 19 ஊரடங்குக்கு மத்தியில் வழங்கப்பட்ட தளர்வைக் கருத்தில் கொண்டு கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால், முதலில் 25 சதவீதம் உயர்த்திய ஆந்திர அரசு செவ்வாயன்று மது விலையை மேலும் 50 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்தது. இதனால் ஒட்டுமொத்தமாக 75 சதவீதம் அதிகரித்துள்ளன.
மது அருந்துவதை ஊக்கப்படுத்தாமல் இருப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த விலையேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறியது.
ஆந்திராவில் குண்டூர் பகுதியில் கடையை மூடக் கோரி மச்சாவரம் வட்டாரத்தைச் சேர்ந்த பில்லட்லா கிராம மக்கள் கடையை மூடக் கோரி திறக்கப்பட்ட மதுபானக் கடை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அப்போது போலீஸாரும் பொதுமக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள், கரோனா வைரஸ் பரவலின் போது மதுக்கடை திறப்பது ஆபத்தானதாக இருக்கும் என்று தெரிவித்தனர். மேலும் மதுபானங்களை வாங்க மற்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் கிராமத்திற்கு வருகிறார்கள் இது கரோனா வைரஸ் பரவலுக்கே வழிவகுக்கும் என்று உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT