Last Updated : 06 May, 2020 11:40 AM

 

Published : 06 May 2020 11:40 AM
Last Updated : 06 May 2020 11:40 AM

ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் கவலைக்கு செவிசாய்த்த எடியூரப்பா: புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில்கள் கேன்சல்

கர்நாடகா, பெங்களூருவிலிருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்கள் பயணத்துக்காக விடப்பட்டிருந்த மாநிலங்களுக்கு இடையிலான ஷ்ரமிக் ரயில்களை கர்நாடகாவின் எடியூரப்பா தலைமை பாஜக ஆட்சி ரத்து செய்துள்ளது.

ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மாநில முதல்வர் எடியூரப்பாவைச் சந்தித்து கட்டுமானப்பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று கோரிக்கை வைக்க உடனடியாகச் செவிசாய்த்த அவர் தன் ட்வீட்டில், “தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வேண்டம என்று அவர்களை திருப்தி செய்ய அமைச்சர்களுக்கு வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து என்.மஞ்சுநாத் பிரசாத் என்ற அதிகாரி தென் மேற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு, “ரயில் சேவைகள் 6ம் தேதி முதல் தேவையில்லை” என்று கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா அரசு பெங்களூரு - தனாபூர் ரயில்களுக்கு தொழிலாளர்களிடமிருந்து பயணி ஒருவருக்கு ரூ.910 கட்டணம் வசூலிக்கிறது. பெங்களூரு-ஜெய்ப்பூருக்கு ரூ.855, பெங்களூரு-ஹவுராவுக்கு ரூ.770 என்று பலவிதமாக கட்டணங்களை வசூலிக்கிறது, ரெகுலர் படுக்கை வசதி வகுப்பு கட்டணத்துடன் சூப்பர் பாஸ்ட் கட்டணம் ரூ.30 கூடுதல் கட்டணம் ரூ.20 என்று வசூலிக்கிறது.

இதோடு கர்நாடகாவில் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களிலிருந்து ரயில் நிலையத்துக்கு வரும் பேருந்துகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரூ.130-140 வசூலிக்கிறது. இதற்கான தொகைகளை முன்கூட்டியே தொழிலாளர்கள் செலுத்த வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x