Published : 06 May 2020 08:04 AM
Last Updated : 06 May 2020 08:04 AM
பெட்ரோலில் லிட்டருக்கு 13 ரூபாயும், டீசலில் லிட்டருக்கு 10 ரூபாயும் கலால் வரியை உயர்த்தி மத்திய அரசு நேற்று நள்ளிரவில் உத்தரவு வெளியிட்டது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்தும், அந்த பலனை இந்த முறையும் மக்களுக்கு வழங்காமல் மத்திய அரசே எடுத்துக்கொண்டது.
இந்த கலால்வரி உயர்வு மூலம் மத்திய அசுக்கு ரூ.1.60 லட்சம் கோடி வருவாய் கூடுதலாகக் கிடைக்கும். இந்த கலால் வரி உயர்வு மூலம் சில்லரை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலை உயராது என்றாலும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் அனைத்தையும் தொடர்ந்து மத்தியஅரசு எடுத்துக்கொண்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் இதேபோன்று பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு 3 ரூபாய் கலால் வரியை மத்தியஅ ரசு உயர்்த்தியதும் நினைவிருக்கும்.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் கலால் வரித்துறை வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “ பெட்ரோல் மீதான கலால் வரி 2 ரூபாயும், சாலை கூடுதல் வரி லிட்டருக்கு 8 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. டீசலுக்கு கலால் வரி லிட்டருக்கு 5 ரூபாயும் சாலைவரி ரூ.8 அதிகரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வரும்போது பெட்ரோலுக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ.9.48 பைசாவும், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.3.56 பைசாவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது பெட்ரோல் மீது ஒட்டுமொத்தமாக கலால் வரி லிட்டருக்கு ரூ.32.98 பைசாவும், டீசலில் லிட்டருக்கு ரூ.31.83 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் பெட்ரோல், டீசல் மீது கலால் வரியை லிட்டருக்கு3 ரூபாய் உயர்த்தி அதன் மூலம் கூடுதலாக ரூ.39 ஆயிரம் திரட்ட மத்திய அரசு திரட்டியது. இப்போது இந்த வரி உயர்வு மூலம் ரூ.1.60 லட்சம் கோடி கிடைக்கும்.
சர்வதேச சந்ைதயில் கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்தும் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் நாள்தோறும் மாற்றப்படும் பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படாமல் தொடர்ந்து வருகிறது. இப்போது இந்த வரி உயர்வு மூலம் எண்ணெய் நிறுவனங்கள் அந்த இழப்பை ஈடுசெய்துள்ளன.
மார்ச் 14-ம் தேதியிலிருந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 40 முதல் 50 சதவீதம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியச் சந்தைக்குள் பேரல் 20 டாலராகவும் சரி்ந்தது. ஆனால் கரோனாவைக் காரணமாகக் காட்டி, சில்லறை விலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. நுகர்வோருக்குப் பலனும் கிடைக்கவில்லை லாக் டவுன் காலகட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனை 70 சதவீதம் சரிந்துவிட்டது
உண்மை நிலவரம் என்பது கடந்த மார்ச் 16-ம் தேதியிலிருந்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் சர்வதேச சந்தைக்கு ஏற்றார்போல் மாற்றவில்லை. நாள்தோறும் விலையை மாற்ற வேண்டும் என்ற செயல்முறை இருந்தும் அதை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 40 நாட்களாக அமல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் நிறுவனங்கள் கணக்கின்படி ஒரு டாலர் கச்சா எண்ணெய் விலையில் சரிந்தால், பெட்ரோல், டீசல் விலையில் 40 பைசா குறைக்க வேண்டும்.அந்த வகையில் லிட்டருக்கு 5 ரூபாய்க்கும் அதிகமாக் குறைக்க வேண்டும். ஆனால், குறைக்கவில்லை. மத்திய அரசு கடந்த மாதம் உற்பத்தி வரியை 3 ரூபாய் உயர்த்தியது போல் எதிர்காலத்திலும் உயர்த்தும் என்பதால் அந்த விலை உயர்வைச் சமாளிக்க இந்த விலைக் குறைப்பின் பயனை மக்களுக்குத் தராமல் எண்ணெய் நிறுவனங்கள் வைத்துக்கொண்டன.
கடந்த 15 மாதங்களில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.11.77 பைசாவும், டீசலில் லிட்டருக்கு ரூ.13.47 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2014-15-ம் ஆண்டு கலால் வரி மூலம் மோடி அரசு ரூ.99 ஆயிரம் கோடி ஈட்டிய நிலையில் 2016-17-ம் ஆண்டில் இது இரு மடங்காகி ரூ.2.42 லட்சம் கோடியாக அதிகரித்தது
கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு அக்டோபரில் கலால் வரி 2 ரூபாயும், அதன்பின் ரூ.1.50 பைசாவும் குறைக்கப்பட்டது. பின்னர் 2019 ஜூலையில் மீண்டும் 2 ரூபாய் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT