Published : 05 May 2020 04:28 PM
Last Updated : 05 May 2020 04:28 PM

மதுவாங்க சமூகவிலகல் இன்றி கூடிய கூட்டம்: கட்டுப்படுத்த முடியாமல் திணறல்: வைரலாகும் வீடியோ

விசாகப்பட்டினம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மதுபான கடையில் மதுபானங்ளை வாங்க வந்தோர் சமுக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு நின்ற காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் லாக்டவுன் கொண்டுவரப்பட்டது. முதல் இரு கட்ட லாக்டவுன் 3-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. 3-வது கட்ட லாக்டவுனில் சில கட்டுப்பாடுகள் தளர்வுடன் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்களும் லாக்டவுன் தளர்வை கரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் அமல்படுத்தி, மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதித்துள்ளனன. ஆந்திரப் பிரதேச அரசு சிவப்பு மண்டலங்கள் தவிர்த்து பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் மதுக்கடைகளை நேற்று திறந்தன. இதனால் மதுப்பிரியர்கள் சமூக விலகலைக் காற்றில் பறக்கவிட்டு இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் நின்றனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் குவிக்கப்பபட்டிருந்தும் மக்கள் கட்டுக்குள் வரவில்லை.

விசாகப்பட்டினத்தில் உள்ள மதுபான கடைகளில் மதுபானங்ளை வாங்குவதற்காக ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் சமுக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு நின்றனர். அவர்களை வரிசைப்படுத்த பெரும் முயற்சி செய்தும் நடைபெறவில்லை. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x