Last Updated : 04 May, 2020 02:48 PM

1  

Published : 04 May 2020 02:48 PM
Last Updated : 04 May 2020 02:48 PM

டெல்லியில் மதுபானக் கடைகள் திறப்பு: காற்றில் பறக்கவிடப்படும் ஊரடங்கு விதிமுறைகள்

புதுடெல்லி

டெல்லியில் குறைந்தபட்ச அளவில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் ஊரடங்கு விதிமுறைகள் காற்றில் பறக்கவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் லேசான தடியடிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 17 வரை ஊரடங்கு தேசிய அளவில் நீட்டிக்கப்பட்டாலும் சில தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டன. மே 4-ம் தேதி முதல் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் நாட்டின் தலைநகரத்தில் மதுபானம், புகையிலை போன்றவற்றை விற்கும் கடைகளை டெல்லி அரசு ஞாயிற்றுக்கிழமை அனுமதித்தது.

இதுகுறித்து டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மதுபானம், பான், குட்கா, புகையிலை போன்றவற்றை விற்கும் கடைகள், தனித்தனியான கடைகள், சுற்றுப்புறக் கடைகள் அல்லது குடியிருப்பு வளாகங்களில் உள்ள கடைகள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுபானக் கடைகளை மீண்டும் திறப்பது சில ஊரடங்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டது ஆகும். இந்தக் கடைகள் வாடிக்கையாளர்களிடையே குறைந்தபட்சம் 6 அடி தூரத்தை உறுதி செய்வதோடு, கடையில் ஒரு முறை 5 பேருக்கு மேல் இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

திங்கள்கிழமை அதிகாலை முதல் மக்கள் தங்களுக்கு விருப்பமான மதுபானத்தை வாங்குவதற்காக மதுக்கடைகளுக்கு வெளியே திரண்டனர்.

சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான் உள்ளிட்ட பிற மாநில நகரங்களிலும், நாட்டின் பல மாநிலங்களிலும் மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீண்ட வரிசைகளில் மதுபானப் பிரியர்கள் நின்றனர்.

காஷ்மீர் கேட்டில் உள்ள ஒரு மதுபானக் கடைக்கு வெளியே நீண்ட வரிசையில் மதுபானப் பிரியர்கள் வரிசையில் நின்றனர். ஆனால் சமூக இடைவளி விதிமுறைகள் மீறப்பட்டதால், போலீஸார் லேசான லத்தி சார்ஜ் செய்ய வேண்டியிருந்தது,

இதேபோல், டெல்லியின் பல இடங்களிலும் மதுபானம் வாங்க நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x