Last Updated : 03 May, 2020 05:57 PM

2  

Published : 03 May 2020 05:57 PM
Last Updated : 03 May 2020 05:57 PM

இந்தியாவின்  கரோனா இறப்பு விகிதம்  உலகளவில் மிகவும் குறைவு; 10,000 க்கும் மேற்பட்டோர் குணமாகி சென்றுள்ளனர்: மத்திய அமைச்சகர் தகவல்

கரோனா சிகிச்சைகளைப் பார்வையிட புதுடெல்லி லேடி ஹார்ட்டிங் மருத்துவமனைக்கு வந்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன். | படம்: ஏஎன்ஐ.

புதுடெல்லி

கரோனா இறப்பு விகிதம் உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் மிகக் குறைவானதாகும்; 10,000 க்கும் மேற்பட்டோர் குணமாகிச் சென்றுள்ளனர் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,644 என்றும் உயிரிழந்தோர் 83 பேர் என்றும் தெரிவித்துள்ள மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இதுவரை உயிரிழந்தோர் 1,301 பேர் என்றும் கோவிட் 19ல் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39,980 ஐ எட்டியுள்ளது என்றும் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் கரோனா சிகிச்சை நடைபெற்று வரும் மருத்துவமனைகளைப் பார்வையிட்டு வருகிறார். இன்று லேடி ஹார்டிங் மருத்துவமனையைப் பார்வையிட்டார். பின்னர் ஏஎன்ஐயிடம் அவர் கூறியதாவது:

இந்தியாவின் கோவிட் 19 இறப்பு விகிதம் 3.2 சதவீதமாக இருப்பது உலகில் மிகக் குறைவு ஆகும். இதுவரை நோயிலிருந்து குணமடைந்த கரோனா வைரஸ் நோயாளிகள் 10 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் இன்னும் அனுமதிக்கப்பட்டவர்களில் மீண்டு வரும் நிலையில் பலர் உள்ளனர். கோவிட் 19 பரவலின் வேகம் கடந்த 14 நாட்களில் இரட்டிப்பு விகிதம் 10.5 நாட்கள் என்றிருந்தால், இன்றைய தினம் 12வது நாள் ஆகும்.

10,633 கோவிட் பாசிட்டிவ் நோயாளிகள் குணப்படுத்தப்பட்டவர்கள் / வெளியேற்றப்பட்டவர்கள் தவிர,
தற்போது, 28,046 பேருக்கு கரோனா வைரஸ் செயலில் உள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x