Published : 03 May 2020 08:07 AM
Last Updated : 03 May 2020 08:07 AM
ஆந்திர மாநிலத்தில் நேற்று 62 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம்கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,525 ஆக உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி ஆந்திராவில் 1,051 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 441 பேர் தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 33 பேர் இறந்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமராவதியில் நேற்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் முதல்வர் ஜெகன்மோகன் பேசும்போது, "ஒவ்வொருகிராம வருவாய் அலுவலகமும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்கள் 10 முதல் 15 பேர்வரை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதனால் சுமார் 1 லட்சம் படுக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய சுமார் 500 அரசு பேருந்துகளை மொபைல் வாகனம் போல பயன்படுத்த வேண்டும். குளிர்சாதன பெட்டி வசதி இருந்தால் இந்த பேருந்துகள் மூலம் பால், தயிர் போன்றவற்றையும் விநியோகம் செய்யலாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT