Published : 03 May 2020 07:59 AM
Last Updated : 03 May 2020 07:59 AM
ஊரடங்கால் கர்நாடகாவில் சிக்கியுள்ள தமிழர்கள் சொந்த ஊர் செல்வதற்கு உதவுவதற்காக இரு அதிகாரிகளை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கரோனா வைரஸை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக வெளிமாநிலங்களில் முடங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் தங்கள் மாநிலங்களுக்கு செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன்படி கடந்த மார்ச் மாத இறுதி வாரத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தில் முடங்கியுள்ள வெளிமாநில மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப தேவையான நடவடிக்கைகளை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது.
அதன்படி கர்நாடகாவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகதங்கியுள்ள தமிழக தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப உதவ, தமிழ் தெரிந்த அதிகாரிகளை ஒருங்கிணைப்பாளராக கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் இருந்து தமிழகம் செல்ல விரும்புவோர் வி.பொன்னுராஜ் ஐஏஎஸ் (98455 98981), ஹரிசேகரன் ஐபிஎஸ் (94483 86750) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இந்தஇரு அதிகாரிகளும் தமிழக தொழிலாளர்களின் பயணத்துக்குதேவையான உதவிகளை மேற்கொள்வார்கள் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT