Published : 02 May 2020 06:36 PM
Last Updated : 02 May 2020 06:36 PM
கணினி மூலமாகவே பாடம் நடத்தும் வகுப்பறைகளை வடிவமைத்த ஹேக்கத்தான் தொழில்நுட்பப் பிரிவில் நடந்த போட்டியில் உலகளாவிய பரிசாக 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கேரள மாணவர்கள் வென்றுள்ளனர்.
கரோனா வைரஸ் உலகத்தையே புரட்டிவரும் வேளையில் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் வேகமாக மாறி வருகிறது. கூட்டமாகச் சேர்ந்து செய்யும் பணிகள் எல்லாமே மாறத் தொடங்கிவிட்டன. அவ்வகையில் கல்வித்துறையிலும் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை உருவாக்க ஒரு சர்வதேசப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுகுறித்து கேரள ஸ்டார்ட் அப் மிஷன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''உலகம் முழுவதும் பரவியுள்ள இளம் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச #கோவிட்-19, தொண்டு நிறுவனங்களான மோத்வானி ஜடேஜா குடும்ப அறக்கட்டளை மற்றும் சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனமான ஹேக்கரெர்த் ஆகிய அமைப்புகள் சர்வதேச அளவில் கோவிட்-19க்கு எதிரான விர்ச்சுவல் வகுப்பறை எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்தான ஒரு போட்டியை நடத்தியது கற்றலில் புதுமைகளை செய்துவரும் இவர்களது முயற்சி சமூக ஊடகங்களால் ஆதரிக்கப்பட்டு வருகிறது.
மோத்வானி ஜடேஜா குடும்ப அறக்கட்டளை மற்றும் சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனமான ஹேக்கரெர்த் ஆகிய அமைப்புகள் நடத்திய சர்வதேச ஹேக்கத்தான் போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இப்போட்டியில் பங்கேற்று தங்கள் கணினித் திட்டங்களை வழங்கிய கன்னூர் அரசு பொறியியல் பி.டெக் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பயின்றுவரும் அபினந்த் சி மற்றும் ஷில்பா ராஜீவ் இருவரும் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வென்றுள்ளனர். ஒரு விர்ச்சுவல் வகுப்பறை எப்படியிருக்க வேண்டும் என்பதை இவர்கள் மிகச் சிறந்த முறையில் வடிவமைத்தார்கள் என்று பரிசு வழங்கிய குழு பாராட்டியது''.
இவ்வாறு கேரள ஸ்டார்ட் அப் மிஷன் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT