Published : 02 May 2020 08:01 AM
Last Updated : 02 May 2020 08:01 AM
மத்திய சுகாதார அமைச்சகம் கரோனா பாதிப்பை 3 விதங்களாகப் பிரித்ததில் 130 மாவட்டங்களை இந்தியா முழுதும் அதிபாதிப்பு ஹாட்ஸ்பாட் சிவப்பு மண்டலங்களாக ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கை மே 4 முதல் 17ம் தேதி வரை நீட்டித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை லாக்டவுன் குறித்து அறிவித்துள்ளனர்.
284 சுமார் பாதிப்பு மண்டலங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும் 319 மண்டலங்கள் பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களாகவும் அறிவித்துள்ளது, இது மே 4 முதல் ஒரு வாரத்துக்கான அறிவிப்பாகும்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பிரீத்தி சுதன் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
கரோனா பாதிப்பு எங்கெல்லாம் இரு மடங்கு ஆகி இருக்கிறது மற்றும் கண்காணிப்பு, குணம் அடைந்தோர் எண்ணிக்கை மற்றும் சோதனைகளின் அடிப்படையில் நாடு முழுவதும் மாவட்டங்களை சுகாதார அமைச்சகம் வாரந்திர அடிப்படையில் மீண்டும் வகைப்படுத்தி இருக்கிறது. அதன்படி 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், 319 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், புனே, ஆமதாபாத் போன்ற பெரு நகரங்கள் சிவப்பு மண்டலத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன. சிவப்பு மண்டத்தில் 28 நாட்களும், ஆரஞ்சு மண்டலத்தில் தொடர்ந்து 14 நாட்களும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றால் அவை பச்சை மண்டலமாக இதுவரை வகைப்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரு மாவட்டம் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆந்திராவில் 5 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும், 7 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திலும், ஒரு மாவட்டம் பச்சை மண்டலத்திலும் இடம்பெற்று இருக்கின்றன.
தெலுங்கானாவில் 6 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 18 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், 9 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும், மராட்டியத்தில் 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 16 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், 6 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
புதுச்சேரி, அசாம், இமாசலபிரதேசம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் சிவப்பு மண்டலம் இல்லை. இப்படி பல்வேறு மாநிலங்களும் வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
மாவட்டங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநகராட்சிகள் அல்லது நகராட்சிகள் மற்றும் பிற பகுதிகள் இருந்தால் அவற்றை தனி பிரிவுகளாக வகைப்படுத்திக் கொள்ளலாம். சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை உருவாக்கி கொரோனா பரவல் சங்கிலி தொற்றை உடைக்க வேண்டும். அந்த பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு நிற மண்டலங்களாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும், 1 மாவட்டம் பச்சை நிற மண்டலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகத்தின் சிவப்பு மண்டலங்கள்:
1. சென்னை
2. மதுரை
3. நாமக்கல்
4. தஞ்சாவூர்
5. செங்கல்பட்டு
6. திருவள்ளூர்
7. திருப்பூர்
8. ராணிப்பேட்டை
9. விருதுநகர்
10. திருவாரூர்
11. வேலூர்
12.காஞ்சிபுரம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT