Published : 01 May 2020 06:30 PM
Last Updated : 01 May 2020 06:30 PM
ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்த்தகர்களை வணிகர்களை புறக்கணிக்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் புதியதாக 70 பேருக்கு கரோனா வைரஸ் நோய் ஏற்பட்டதை அடுதது அங்கு கோவிட் 19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,281 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகின் ஆறாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசம் முன்னோடியில்லாத வகையில் நெருக்கடியை எதிர்கொள்கிறது. கரோனா வைரஸ் நாவல் குறித்து எதிர்க்கட்சி தொடர்ந்து மாநில அரசுக்கு ஆலோசனைகளை அளித்து வருகிறது. இதற்காக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டுமெனவும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்தவாரம் பாஜக வைச் சேர்ந்த சுரேஷ் திவாரி எம்.எல்.ஏ., தியாக்களிடம் (முஸ்லிம்களிடம்) யாரும் காய்கறிகள் வாங்க வேண்டாம் என ஒரு பிரத்யேக வீடியோவில் பேசியது மிகவும் சர்ச்சையானது. இதனையும் அகிலேஷ் யாதவ் இன்றைய அறிக்கையில் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து இன்றுஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நிலவும் சூழ்நிலையைப் பற்றி விவாதிக்க உடனடியாக ஒரு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும். இதன்மூலம் கொடிய கரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு கூட்டு செயல்திட்டத்தை உ.பி.அரசு வகுக்க வேண்டும். எனவே முக்கிய பிரச்சினைகள் குறித்து சிறப்பு அமர்வுகளை கூட்டுவது ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடாது.
உலகின் ஆறாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசம் முன்னோடியில்லாத வகையில் நெருக்கடியை எதிர்கொள்கிறது. கரோனா வைரஸ் குறித்து எதிர்க்கட்சி என்றமுறையில் நாங்கள் தொடர்ந்து மாநில அரசுக்கு ஆலோசனைகளை அளித்து வருகிறோம்.
இந்த சிறப்பு அமர்வு மாநில அரசுக்கு ஒரு கூட்டு செயல் திட்டத்தை வகுப்பதற்கான வாய்ப்பையும் வழங்கும். முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜனநாயக செயல்பாட்டை நம்பவில்லை என்று தெரிகிறது.லாக்டவுனில் ஏழைகள் பட்டினி கிடக்கும் போது அணி -11 என்ன செய்து கொண்டிருக்கிறது? மக்கள் தங்கள் வாழ்க்கையை தனிமைப்படுத்தலில் முடித்துக்கொண்டுவருகின்றனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு உணவு மற்றும் தண்ணீருக்கான ஏற்பாடுகள் ஏதுமின்றி நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் அரசுக்கு ஒரு கறை.
சிறப்பு அமர்வு நடத்தப்பட்டால் இந்த பிரச்சினைகள் அனைத்தும் சட்டப்பேரவையில் நிச்சயமாக எழுப்புவோம்.
கரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வதற்கு பாஜக அரசிடம் தெளிவான திட்டம் இல்லை. பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கு ஏற்ப அரசியல் விருப்பமும் அதற்கு இல்லை.
இந்த சோதனை காலங்களில் கூட, தரமற்ற மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிபிஇ கருவிகளை வாங்குவது குறித்து அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன என்பது மிகவும் வருத்தமாக உள்ளது.
அண்மையில் ஒரு எம்.எல்.ஏ.,பேச்சு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வர்த்தகர்களையும் வணிகர்களையும் புறக்கணிக்க பாஜக தலைவர்கள் மக்களுக்கு அறிவுறுத்துவது துரதிர்ஷ்டவசமானது. கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT