Last Updated : 01 May, 2020 04:05 PM

 

Published : 01 May 2020 04:05 PM
Last Updated : 01 May 2020 04:05 PM

கரோனா வைரஸ் பரவும் அச்சத்தில் ஏ.சி. இயந்திரம் நிறுத்தி வைப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் முடிவு.

பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவும் அச்சத்தினால் கட்டிடம் முழுவதும் குளிரூட்டப்பட்ட மையப்படுத்தப்பட்ட ஏசியை (centralised Air Conditioning) நிறுத்தி வைக்க டெல்லி உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

டெல்லி பார் கவுன்சில் பி.சி.டி தலைவர் வழக்கறிஞர் கே.சி. மிட்டல், மையப்படுத்தப்பட்ட ஏ.சி.க்களைப் பயன்படுத்தி கட்டிடங்களில் கோவிட் 19 பரவுவதால் மையப்படுத்தப்பட்ட ஏ.சி.க்களைப் பயன்படுத்தும் எந்தவொரு கட்டிடமும் போதுமான நடவடிக்கைகள் இல்லாமல் பயன்படுத்தப்படக்கூடாது என்று கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

அப்படி ஏசி பயன்படுத்த வேண்டுமெனில் உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும் வழிகாட்டுதல்களையும் கோரிய அவரது மனு தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.

மத்திய அரசு கட்டிடங்களை நிர்வகிக்கும் மத்திய பொதுப்பணித்துறை (சிபிடபிள்யூடி) இயக்குநரகம் இப்பிரச்சினை தொடர்பாக ஏற்கெனவே தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் ஏர் கண்டிஷனிங் மற்றும் காற்றோட்டத்திற்கான கோவிட் 19 வழிகாட்டுதல் ஆவணங்களைப் பின்றபற்றி அதனை ஆய்வுசெய்து பின்னர் நடைமுறைப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் சிபிடபிள்யூடியின் பல்வேறு தாக்கல் செய்யப்பட்ட அலுவலகங்களால் செயல்படுத்தப்பட உள்ளன, அவை நாடு முழுவதும் மத்திய அரசின் பணியிடங்களை பராமரித்து வருகின்றன, அவை பல்வேறு மத்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் நிர்வகிக்கப்படும் பணியிடங்களுடன் காற்று சுழற்சி மூலம் எந்தவிதமான மாசுபாட்டையும் தடுக்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் மிட்டல் வாதத்தையும் சிபிடபிள்யூடி அறிக்கைகையும் ஆராய்ந்த தலைமை நீதிபதி டி.என். படேல் மற்றும் நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:

கோவிட் 19 பரவுவதைப் பொருத்தவரை ஏர் கண்டிஷனிங் (ஏசி) பயன்பாட்டில் உள்ள சிக்கல்களுக்கு எந்தவித கணித ரீதியான தீர்வும் இல்லை என்பதையும் நாம் உணர வேண்டியுள்ளது.

ஏ.சி.க்களைப் பயன்படுத்துவதில் எந்தவிதத்திலும் நல்லதல்ல என்பதையும் மறுக்க முடியாது. எனவே உயர்நீதிமன்ற கட்டிடத்தில் குளிர்சாசன வசதியை பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நிரந்தர தீர்வாக பிற அவசியமான உபகரணங்களை மேலும் பரிசீலனை செய்யப்படும், தற்போதைக்கு சாதாரண மின்விசிறிகள், காற்றோட்டம் மற்றும் சரியான காற்றோட்டத்திற்கான பிற நடவடிக்கைகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும்''

இவ்வாறு டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x