Published : 30 Apr 2020 01:36 PM
Last Updated : 30 Apr 2020 01:36 PM

மக்களிடம் ஓட்டு இருக்கிறது ஆனால் அதிகாரம் இல்லை முடிவுகள் வேறு எங்கோ எடுக்கப்படுகிறது: அதிகார மையக் குவிப்பு பற்றி ரகுராம் ராஜன் பதில்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனுடன் வீடியோவில் உரையாடி கோவிட்-19, இந்தியாப் பொருளாதாரம், சர்வதேசப்பொருளாதார உட்பட பல்வேறு தரப்பட்ட விஷயங்களை அரைமணி நேரம் உரையாடினார்.

இந்தியாவில் கோவிட்-19 வைரசினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தில் வாழ்வாதாரங்களை இழந்த ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவ ரூ.65,000 கோடி வரை செலவழிக்கலாம், இது பெரிய தொகை அல்ல என்று தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடலின் ஒரு பகுதியில் ரகுராம் ராஜன், ராகுல் காந்தியின் கேள்விக்குப் பதில அளிக்கையில், “உலகப் பொருளாதாரத்தில் கரோனாவுக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதார நிலைகளை மேம்படுத்த இந்தியா உரையாடலை வடிவமைப்பதில்தான் உள்ளது அந்த உரையாடலில் தலைமை வகிப்பதாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்தியா இது குறித்து போட்டிபோடும் இரண்டு பெரிய சக்திகளும் ஒன்றாக இல்லை. ஆனால் பெரிய நாடு என்பதால் நம் குரலை உலக பொருளாதார அரங்கில் கேட்கச்செய்ய முடியும். இந்தச் சூழ்நிலையில் இந்தியா தன் தொழிற்துறை, தன் விநியோகச் சங்கிலி ஆகியவற்றுக்கான இடத்தில் இந்தியா தனது வாய்ப்புகளை பெற முயற்சிக்கலாம். பன்முக உலக பொருளாதார ஒழுங்கின் காலக்கட்டமாகும் இது ஒற்றை அல்லது இரட்டை உலக ஒழுங்கு காலக்கட்டம் இல்லை. எனவே இந்தியா தனது உரையாடலை கட்டமைக்க வாய்ப்புள்ளது” என்றார்.

அப்போது ராகுல் காந்தி, அதிகாரம் ஒரு மையத்தில் குவிக்கப்படும் போக்கு அதிகரித்து வருகிறதே, உரையாடல் நின்றுவிடுகிறதே என்று கேள்வி எழுப்ப அதற்கு ரகுராம் ராஜன்,

“நானும் கூட அதிகாரம் பரவலாக்கப்படுவது முக்கியம் என்றே கருதுகிறேன், அப்போதுதான் உள்நாட்டு, உள்ளூர் தகவல்கள் கிடைக்கும் என்பதோடு முக்கியமாக மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். உலகம் முழுதும் நாம் இப்போது பார்ப்பது என்னவெனில் மக்கள் அதிகாரமிழந்து இருக்கிறார்கள். முக்கிய முடிவுகள் எங்கோ எடுக்கப்படுகிறது. மக்களால் எடுக்க முடிவதில்லை. மக்கள் என்ன உணர்கிறார்கள் என்றால் நம்மிடம் ஓட்டு இருக்கிறது ஆனால் தொலைதூரத்தில் எங்கேயோ நம் வாழ்வு பற்றிய முடிவு எடுக்கப்படுகிறது நாம் முடிவெடுப்பதில்லை. நம் ஊர் பஞ்சாயத்து, நம் மாநில அரசுக்கு குறைந்த அதிகாரமே உள்ளது, எனவே நம்மால் எதையும் மாற்ற முடியாது என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படுகிறது. அதனால்தான் பலதரப்பட்ட சக்திகளுக்கு அவர்கள் இரையாக வேண்டியுள்ளது.”

இவ்வாறு ரகுராம் ராஜன் இந்த உலக அரசியல், பொருளாதார ஒழுங்கமைப்பில் மக்களின் அன்னியமாதல் பற்றி குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x