Published : 30 Apr 2020 11:19 AM
Last Updated : 30 Apr 2020 11:19 AM
கரோனா வைரஸ் பிரச்சினையால் வேலையிழந்து வறுமையில் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்க உடனடியாக ரூ.65ஆயிரம் கோடி தேவை. லாக்டவுனை தொடர்ந்து நீட்டிக்காமல் பொருளாதாரத்தை படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான வழியைத் தேட வேண்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் ராகுல் காந்தியுடனான வீடியோ உரையாடலில் தெரிவித்தார்
கரோனா வைரஸால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, தீர்வுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பல்வேறு நிபுணர்களுடன் பேசவிருக்கிறார், இதில் முதற்கட்டமாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன் 20 நிமிடங்களுக்கும் மேலாக ராகுல் காந்தி காணொலி வாயிலாகப் பேசினார். அப்போது ரகுராம் ராஜன் பகிர்ந்து கொண்டதாவது:
கரோனா வைரஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பை இழந்து ,வருமானமில்லால் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்க உடனடியாக ரூ.65 ஆயிரம் கோடி தேவை.
இந்தியாவின் உள்நாட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு ரூ200லட்சம் கோடி. இதில் ரூ65 ஆயிரம் கோடிதான் ஏழைகளுக்கு ஒதுக்கப்போகிறோம். இது பெரிய தொகை அல்ல.
தேசிய அளவில் லாக்டவுனை முடிக்க மத்திய அரசு முடிவு செய்தவுடன் முதலி்ல் மக்களின் வாழ்வாதாரத்தை, உயிரைக் காக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். கரோனா பாதிப்பு என்பது இதுவரை யாரும் சந்திக்காத இக்கட்டான நிலையில், இந்த நேரத்தில் நாம் மக்களைக் காக்க, பொருளாதாரத்தைக் காக்க மரபுகளை, விதிமுறைகளை மீறலாம். அதேநேரத்தில் நமக்கு ஏராளமான வளங்கள் இருக்கின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்
நம்முடைய வளங்கள், திறன்கள் அளவாக இருப்பதால் எதற்கு முக்கியத்துவம் அளிக்கப்போகிறோம் என்பதை முன்னுரிமை அளிக்க வேண்டும். எவ்வாறு பொளாதாரத்தை நாம் ஒன்றாக பாதுகாக்கப்போகிறோம் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை 3-வது அல்லது 4-வது லாக்டவுன் வந்தால் பொருளாதாரம் பேரழிவுக்குச் செல்லும். மேற்கத்தியநாடுகளுடன் ஒப்பிடும் போது நிதி மற்றும் பணமதிப்பு நமக்கு அளவானதுதான். ஆதலால், சிறந்த வழியில் பொருளாதாரத்தை நாம் எவ்வாறு மக்களுக்கு திறந்து விடப்போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும்
அமெரிக்கா அளவுக்கு வலிமையாக இருந்தால், நம்பிக்கையிருந்தால் நாள்தோறும் 20 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்த வேண்டும். ஆனால் நாள்தோறும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பரிசோதனைகள் மட்டுமே நடத்த முடிகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆதலால் 100 சதவீதம் கரோனாவை ஒழி்த்து வி்ட்டு, வென்றுவி்ட்டுதான் பொருளாதாரத்தை திறந்துவிடுவோம் என்ற இலக்கெல்லாம் நம்மிடம் இல்லை. ஆனால் நாளொன்றுக்கு 5 லட்சம் சோதனைகளாவது அவசியம்.
நாம் பொருளாதாரத்தை திறந்துவிடும் போது ஆங்காங்கே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வரத்தான் செய்வார்கள், அவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சையளித்து பொருளாதாரத்தை இயக்க வேண்டும். மக்கள் அரசு வேலைவாய்ப்புகளை மட்டும் நம்பியிருக்காமல் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அவசியம். இந்தியா தனது உற்பத்திக்கும், சப்ளைவுக்கும் சர்வதேசஅளவில் நல்ல சந்தை இருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளது. ஆதலால்,நி்ச்சயம் உலகளவி்ல் ஆர்டர்களை எடுக்கஇந்தியாவால் முடியும்
இ்வ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT