Published : 29 Apr 2020 05:56 PM
Last Updated : 29 Apr 2020 05:56 PM

கரோனா; சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான முகக்கவசங்கள் தயாரிப்பு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

நாடு முழுவதும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவல் தடுக்க, நாடேங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், இந்த தொற்றுப் பரவிலில் இருந்து ஒவ்வொருவரையும் பாதுகாக்க முகக்கவசம் என்பது முக்கிய தேவையாக இருக்கிறது.

இதன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு முதல்கட்டமாக அரசுத்துறைகளுக்கு தேவையான முகக்கவசங்களை பல்வேறு தரப்பினரும் தயாரித்து வருகின்றனர். அரசு துறைகள் மட்டுமின்ற அரசு சார தொழில் முனைவோர், சமூக அமைப்புகள், சிறை கைதிகள் என பலரும் இந்த முககவசங்களை தயாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் கீழ் உள்ள தீன்தயாள் அந்யோதயா யோஜ்னா - தேசிய நகர்ப்புற வாழ்வாதரத் திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சுயஉதவிக் குழுக்களின் இடைவிடாத முயற்சி, ஆக்கப்பூர்வமான சக்தியால் ஒரு கோடிக்கும் அதிகமான முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

DAY-NULM இயக்கத்தின் உதவியோடு தொழில்முனைதலில் ஈடுபட்டுள்ள பெண்களின் வலிமையான ஆற்றலை பெருமிதமான இந்தத் தருணமானது வெளிப்படுத்திக் காட்டுவதாகவும், மற்றவர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் கூடுதல் ஆற்றல் மற்றும் உறுதியுடன் முயற்சிகளை பலமடங்கு அதிகரிப்பதே இதன் நோக்கம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x