Published : 29 Apr 2020 05:50 PM
Last Updated : 29 Apr 2020 05:50 PM
இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு ஹாட்ஸ்பாட்களான அதிபாதிப்பு பகுதிகள் கடந்த 15 நாட்களில் 170 மாவட்டங்களிலிருந்து 129 மாவட்டங்களாகக் குறைந்துள்ளது.
ஆனால் அதே வேளையில் தொற்று இல்லாத மாவட்டங்களைக் குறிக்கும் பச்சை மண்டலங்களின் எண்ணிக்கை 325லிருந்து 307 ஆகக் குறைந்துள்ளது
இதே 15 நாட்கள் காலக்கட்டத்தில் ஹாட்ஸ்பாட்கள் இல்லாத ஆரஞ்சு மண்டலப் பகுதிகள் 297 லிருந்து 207 ஆக குறைந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்ரன.
ஏப்ரல் 15ம் தேதி மத்திய அரசு கரோனா மாவட்டங்களை 3 பிரிவுகளாகப் பிரித்தன. அதாவது கொவிட்-19 அதிகம் உள்ள அல்லது அதிகமாக பாதிக்கப்படும் விகிதம் உள்ள மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட்களாகின, இது சிகப்பு மண்டலம், குறைந்த அளவு கேஸ்கள் உள்ளவை ஆரஞ்சு மண்டலம், அதாவது ஹாட்ஸ்பாட்கள் அல்லாதவை, கோவிட்-19 கேஸ்களே இல்லாத பகுதிகள் பச்சை மண்டலம் என்று பிரிக்கப்பட்டன.
ஏப்ரல் 15ம் தேதி 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சேர்த்து மொத்தம் 170 மாவட்டங்கள் கரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்கள் அதாவது சிகப்பு மண்டலம் என்று மத்திய அரசு அறிவித்தது. 325 மாவடங்கள் கரோனா கேஸ் ரிப்போர்ட் ஆகாத மாவட்டங்கள் என்றும் அறிவித்தது.
செவ்வாயன்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் 80 மாவட்டங்களில் கடந்த 7 நாட்களில் புதிய கரோனா தொற்று இல்லை என்றும் கடந்த 14 நாட்களில் 47 மாவட்டங்களில் புதிய கரோனா இல்லை என்றும் அறிவித்தார்.
அதே போல் கடந்த 21 நாட்களி 39 மாவட்டங்களில் எந்த ஒரு புதிய கரோனா தொற்றும் ரிப்போர்ட் ஆகவில்லை. கடந்த 28 நாட்களாக 17 மாவட்டங்களில் புதிய தொற்றுக்கள் எதுவும் இல்லை.
மத்திய அரசு ஏற்கெனவே 9 மாநிலங்களில் உள்ள 15 மாவட்டங்களில் கரோனா சுமை அதிகம் என அடையாளப்படுத்தியது. இதில் டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் ஆகியவை அதிக வைரஸ் சுமை உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டன. ஹைதராபாத் (தெலங்கானா), புனே, ஜெய்பூர், இந்தூர், அகமதாபாத், மும்பை, டெல்லி ஆகியவற்றில் கரோனா எண்ணிக்கை அதிகம் உள்ளது.
மேலும் ‘கிரிட்டிக்கல்’ பகுதிகளாக வதோதரா, கர்னூல், போபால், சென்னை, ஜோத்பூர், ஆக்ரா, தானே சூரத் ஆகிய நகரங்கள் அடையாளம் காணப்பட்டன,
மூத்த சுகாதார அமைச்சக அதிகாரி கூறும்போது, இந்தியாவில் கரோனா வைரஸ் கேஸ்கள் இரட்டிப்பாகும் கால இடைவெளி லாக் டவுனுக்கு முன்னதாக 3.25 நாட்களாக இருந்தது தற்பொது 10.2 நாட்களிலிருந்து 10.9 நாட்களாக கால இடைவெளி அதிகரித்துள்ளது என்றார்.
மகாராஷ்டிராவில் 9,318 கேஸ்கள் என்று அதிகபட்சமாக உள்ளது, குஜராத்தில் 3,744 கேஸ்கள், டெல்லியில் 3,314 கேஸ்கள் ம.பி.யில் 2,387, ராஜஸ்தானில் 2,364, தமிழ்நாடு 2,058, உ.பி. 2053, ஆந்திராவில் 1,259, தெலங்கானாவில் 1004 என்று கரோனா கேஸ்கள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT