Published : 28 Apr 2020 08:33 AM
Last Updated : 28 Apr 2020 08:33 AM
கர்நாடக மாநிலம், வடகன்னட மக்களவை தொகுதி பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்தகுமார் ஹெக்டே (51), சர்ச்சைக்குரிய கருத்துகளால் பரவலாக அறியப்பட்டவர். இவர் கடந்த வாரம் தனது ட்விட்டர் பக்கத்தில், டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டை, கரோனா வைரஸ் பரவலுடன் இணைத்து மத ரீதியிலான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
இப்பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பலரும் ட்விட்டரில் புகார் செய்தனர். இதையடுத்து ட்விட்டர் நிறுவனம் அனந்தகுமார் ஹெக்டேவின் ட்விட்டர் பக்கத்தை முடக்குவதாகஅறிவித்துள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய பதிவுகளை அவர் நீக்கினால் அவரது ட்விட்டர் பக்கம் விடுவிக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தகவல் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அனந்தகுமார் ஹெக்டே கூறும்போது, “எனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதால் நான் கவலைப்படவில்லை. என்பதிவுகளை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை. ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்கள் இந்தியாவில் டிஜிட்டல் காலனிய ஆட்சி முறையை உருவாக்க முயற்சிக்கின்றன. அதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன். உண்மையை விவரிக்கும் எனது கருத்து சுதந்திரத்தில் தேவையின்றி தலையிடும் ட்விட்டர் நிறுவனம்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT