Published : 27 Apr 2020 04:15 PM
Last Updated : 27 Apr 2020 04:15 PM
''பிளாஸ்மா நன்கொடை அளிக்க 45 நிமிடம்தான் ஆனது; நம்மால் ஒருவர் உயிர்காப்பாற்றப்படும், அது மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார் கரோனா பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பிளாஸ்மா நன்கொடை அளித்த டெல்லிவாசி அனுஜ் சர்மா.
பிளாஸ்மா சிகிச்சையிலிருந்து கோவிட் 19 சிகிச்சையில் நம்பிக்கைக்குரிய முடிவுகள் வரத் தொடங்கியுள்ளன. பல பிளாஸ்மா நன்கொடையாளர்கள் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
அத்தகைய ஒரு நன்கொடையாளரான அனுஜ் சர்மா ஏஎன்ஐக்கு அளித்த பேட்டி
மார்ச் 20 அன்று ஐரோப்பாவிலிருந்து டெல்லிக்குத் திரும்பினேன், மார்ச் 29 அன்று, கரோனா வைரஸிற்கான பரிசோதனையை மேற்கொண்டேன், நோய்த்தொற்று உறுதியான 'பாஸிட்டிவ்' கண்டறியப்பட்ட பின் நகரத்தின் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்றது.
ஏப்ரல் 15 அன்று குணமடைந்தேன். இந்த காலகட்டத்தில் எனது மனைவியும் மகனும் கரோனா வைரஸ் நோய்த்தொற்று ஆளாகினர். எனினும் மற்றவர்களை காப்பாற்ற பிளாஸ்மா நன்கொடை அளிக்கும் யோசனையை அளித்ததே என் மனைவிதான்.
பிளாஸ்மா நன்கொடை பற்றி மருத்துவர் எங்களுக்கு அறிவுறுத்தினார். இதனை அறிந்த என் மனைவி என்னை ஊக்குவித்தார். நம்மால் முடியும் என்றால் மற்றவர்களையும் நாம் காப்பாற்ற வேண்டும் என்று யோசனை கூறினார். ஏப்ரல் 25 ஆம் தேதி எங்கள் திருமண ஆண்டுவிழா. அன்று பிளாஸ்மாவை தானம் செய்ய நானும் ஒப்புக்கொண்டேன்.
மருத்துவர்களிடம் சம்மதம் தெரிவித்த பிறகு எனக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்தனர். 45 நிமிடங்களுக்குள்ளாகவே பிளாஸ்மா நன்கொடை செய்யப்பட்டது. நமது பிளாஸ்மா நன்கொடையால் ஒருவரின் உயிரைக் காப்பாற்றப்படும். நம்மால் முடிந்தால், நிச்சயம் நாம் அதைச் செய்ய வேண்டும்.
இந்த முயற்சியில் எல்லோரும் உதவ வேண்டும் என்று நினைக்கிறேன். நாம் வெற்றிகரமாக இருந்தால், கரோனா வைரஸை வலுவாக வெல்வோம், சமூகத்திற்கு ஒரு பெரிய வேலை செய்வோம்.''
இவ்வாறு அனுஜ் சர்மா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT