Published : 26 Apr 2020 10:08 AM
Last Updated : 26 Apr 2020 10:08 AM
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் ஒரே பகுதியில் பொழுதுபோகவில்லை என்ற காரணத்தினால் ட்ரைவர்கள் சிலர் சீட்டாட்டத்தில் ஈடுபட விளையாட்டு விபரீதமாகி 24 பேருக்கு அப்பகுதியில் கரோனா தொற்று பரவியுள்ளது.
இதனை கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் முகமது இம்டியாஸ் தெரிவித்தார். இந்தச் சீட்டாட்டம் மூலமாக இன்னொரு பகுதியிலும் 15 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த 2 விபரீத விளையாட்டுச் சம்பவங்களினால் 40 கரோனா தொற்றுக்கள் கடந்த 2 நாட்களில் ஏற்பட்டுள்ளன.
கிருஷ்ணா லங்கா பகுதியில் லாரி ஓட்டுநர் பொழுது போகவில்லை என்று சீட்டாட்டத்தில் தன் நண்பர்களுடன் ஈடுபட்டார். பெண்களும் குழுவாகச் சேர்ந்து தம்போலா ஆடினர். இதன் மூலம் 24 பேருக்கு கரோனா பரவியுள்ளது. இதே ட்ரக் ட்ரைவர் பிறகு பலருடன் சேர்ந்து அரட்டை அடிப்பதில் ஈடுபட மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது.
ஆந்திராவில் விஜயவாடா கரோனா ஹாட்ஸ்பாட் ஆகும் இங்கு 100 கேஸ்கள் இதுவரை கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 25 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. எனவே சமூக தூரத்தைக் கடைப்பிடிக்க அங்கு கடும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
விளையாட்டு விபரீதமாகும் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் விபரீதமே விளையாட்டாகியிருப்பதை இப்போதுதான் பார்க்கிறோம் என்கின்றனர் அதிகாரிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT