Published : 26 Apr 2020 08:37 AM
Last Updated : 26 Apr 2020 08:37 AM
நிதி ஆயோக் உறுப்பினரும் மருத்துவ மேலாண்மையில் அரசு அதிகாரம் அளித்த கமிட்டியின் முக்கிய உறுப்பினருமான வி.கே.பால் ஆய்வு ஒன்று பற்றி கூறும்போது லாக் டவுன் வைரஸ் பரவும் விகிதத்தையும் வைரஸ் தொற்று இரட்டிப்பாகும் கால இடைவெளியை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். வைரஸ் தொற்று கேஸ்கள் இரட்டிப்பாவதற்கு 10 நாட்கள் ஆகிறது என்கிறார் அவர்.
இந்தியாவைப் பொறுத்தவரை வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இவரது இந்த ஆய்வு வழங்கலின் படி மே 16ம் தேதிக்குப் பிறகு புதிய வைரஸ் தொற்று இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
மே 3ம் தேதி முதல் இந்தியாவில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை 1500 என்று உச்சம் பெற்று மே 12ம் தேதி வாக்கில் 1000 எனக்குறைந்து மே 16-ல் தொற்று இல்லாத நிலையை எட்டும் அதாவது இவரது கணக்கின் படி நேற்று சனிக்கிழமை முதல் மே மாதம் முதல் 15 நாட்கள் வரை 35,000 கரோனா கேஸ்களுக்கும் மேல் மிகாது என்று ஆகிறது.
ஆனால் வி.கே.பால் என்பாரின் இந்த கணிப்பை பெயர் கூற விரும்பாத அதே கமிட்டியில் உள்ள இன்னொரு உறுப்பினர் ’இது சாத்தியமல்ல’ என்கிறார். குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் கேஸ்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. “இதுவரை கேஸ்கள் எண்ணிக்கை குறைவடைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. எனவே அவரது கணிப்பின் அடிப்படை என்னவென்பது தெரியவில்லை. நாங்கள் கரோனா தொற்று அதிகரிக்கும் என்ற அடிப்படையில்தான் ஐசியு, படுக்கைகள், பிராணவாயு எந்திரங்கள் என்று எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம்.
ஐசிஎம்ஆர் தான் வெளியிட்ட ஆய்வு உத்திகளின் படி மே மாதத்தில் 2.1 மில்லியன் ஆர்.என்.ஏ. பரிசோதனைக் கருவிகள், ஜூனில் 2.8 மில்லியன் ஆர்.என்.ஏ டெஸ்ட் கருவிகள் கைவசமிருக்கும் என்று தெரிவித்துள்ளது. சராசரியாக ஒரு கிட் என்பது ஒரு சாம்பிளுக்கானது. இதுவரை ஐசிஎம்ஆர் 54 லட்சம் சாம்பிள்களை சோதித்துள்ளது. இதில் ஒரே நபருக்கான மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட சோதனைகளும் அடங்கும், அதாவது வரும் மாதங்களில் இன்னும் அதிக நபர்களை சோதிக்கவுள்ளது என்று தெரிகிறது. இதில் சமூக கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஆன்ட்டி பாடி டெஸ்ட் கிட்கள் அடங்காது.
ஐசிஎம்ஆர் தொடர்புடைய 200-க்கும் அதிகமான லேப்கள் தற்போது நாளொன்றுக்கு 40,000 சாம்பிள்கள் வரை சோதனை செய்கின்றன.
டாக்டர் வி.கே.பால் இந்நிலையில் மே 16ம் தேதிக்கு பிறகு புதிய கரோனா தொற்று இல்லை என்று கூறுவதற்கான அடிப்படை என்ன என்று அவரிடம் கேட்டு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளுக்கு இன்னும் பதில் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT