Published : 25 Apr 2020 09:47 PM
Last Updated : 25 Apr 2020 09:47 PM

கரோனா; நாளொன்றுக்கு 1 லட்சம் பாதுகாப்பு கவசங்கள்: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி

நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் கருவிகளும், என் 95 கவசங்களும் தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது கரோனா தாக்குதல் வேகமாக இரட்டிப்பாகும் பகுதிகள், மரண விகிதம் அதிகமாக இருக்கும் மாவட்டங்கள் மீது மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. கரோனா சூழ்நிலையைக் கையாளுதலில் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் தேவைகளை சமாளிக்க ஆயத்தநிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நாட்டில் கோவிட் 19 தொற்றின் சமீபத்திய நிலைமை குறித்தும், நோய் பாதிப்பு மற்றும் அதற்கான மேலாண்மை ஆகியவை குறித்தும் விரிவான விளக்கம் அமைச்சர்கள் குழுவிற்கு காண்பிக்கப்பட்டது.


நோய் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மேலாண்மை, போன்றவற்றுக்கான மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விரிவாக அமைச்சர்கள் குழு விவாதித்தது. கோவிட் 19 தொற்றுக்கு எதிராக அவசர காலத் திட்டங்களை மேலும் வலுப்படுத்துமாறும் அவற்றை நடைமுறைப்படுத்துமாறும் அனைத்து மாவட்டங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கூட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:

* போதுமான அளவு தனிப்பட்ட படுக்கைகள், வார்டுகள் , தனிநபர் பாதுகாப்புக் கருவிகள், என் 95 கவசங்கள், மருந்துகள், செயற்கை சுவாச கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்றவை உள்ள, கோவிட்19 தொற்று சிகிச்சை அளிப்பதற்கான தனிப்பட்ட மருத்துவமனைகளின் மாநில வாரியான விவரங்கள் அமைச்சர்கள் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது.

* ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மூலமாக தனிநபர் பாதுகாப்பு கவசங்கள், முகக் கவசங்கள் போன்றவற்றுக்கான உற்பத்தி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது என்றும், இவை போதுமான அளவு கிடைக்கும் என்றும் அமைச்சர் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.


* இதுநாள் வரை நாட்டில் நாளொன்றுக்கு, ஒரு லட்சத்துக்கும் அதிகமான தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் கருவிகளும், என் 95 கவசங்களும் தயாரிக்கப்படுகின்றன. தற்போது நாட்டில் தனிநபர் பாதுகாப்பு கருவிகளைத் தயாரிக்க 104 உள்நாட்டு தயாரிப்பாளர்களும், என் 95 முகக் கவசங்கள் தயாரிக்கும் மூன்று நிறுவனங்களும் உள்ளன.

* இது தவிர உள்நாட்டு தயாரிப்பாளர்களைக் கொண்டு செயற்கை சுவாச கருவிகளை உற்பத்தி செய்வதும் தொடங்கிவிட்டது. ஒன்பது தயாரிப்பாளர்கள் மூலமாக 59 ஆயிரம் யூனிட் செயற்கை சுவாசக் கருவிகள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.

* கோவிட் 19 நோய் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான சோதனை உத்திகள், பரிசோதனை செய்வதற்கான சோதனை கருவிகள் நாடு முழுவதும் கிடைக்கச்செய்தல், தீவிர பாதிப்பு பகுதிகளுக்கான விதிகள், தொகுப்பு மேலாண்மை போன்றவை குறித்தும் அமைச்சர்கள் குழு பரிசீலனை செய்தது.

* கோவிட் 19 நோய் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் செய்யக்கூடிய திறன் கொண்ட, பொது மற்றும் தனியார் ஆய்வுக்கூடங்களின் எண்ணிக்கை குறித்தும், இந்த ஆய்வுக்கூடங்களின் மூலமாக, ஒவ்வொரு நாளும் எவ்வளவு சோதனைகள் நடத்தப்படுகின்றன என்பது குறித்தும் அமைச்சர் குழுவினரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

* அதிகாரம் வழங்கப்பட்ட குழுக்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு பணிகள் குறித்தும் அமைச்சர்கள் குழு விவாதித்தது. அமிதாப் காந்த், டாக்டர் அருண்குமார் பாண்டா மற்றும் திரு பிரதீப் கரோலா ஆகியோர் பல்வேறு விவரங்களை அமைச்சர் குழுவுக்கு எடுத்துக் கூறினார்கள்

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பிறமாநில தொழிலாளர்களுக்கு உணவளிப்பது போன்ற பணிகளை சுமார் 92 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், சிவில் சமுதாய அமைப்புகள் செய்து வருகின்றன என்றும் அமைச்சர் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டது.

* அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு எஸ் டி ஆர் எஃப் நிதியத்திலிருந்து மாநிலங்கள் மூலமாக நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்திய உணவு கழகம் மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குகிறது.

தேவையான நேரத்தில் மிகவும் தேவைப்படும் இடங்களில் இந்த தன்னார்வலர்களை (கோவிட் போராளிகளை) பயன்படுத்திக் கொள்வதற்காக, சுகாதாரப் பணியாளர்கள், தேசிய மாணவர் சேவை, நேரு இளைஞர் மையம், தேதிய மாணவர் படை, மருத்துவர்கள் போன்றவர்களின் விவரங்கள் தேசிய அளவில் தயாரிக்கப்பட்டு, அனைத்து மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் இதர அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்கள் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது

* தற்போது 1.24 நான்கு கோடி மனித ஆற்றல் பற்றிய புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட உள்ளன என்றும் இவை தொடர்ந்து அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றன என்றும் பல புதிய பிரிவுகள், உட்பிரிவுகள் அந்தந்த நிபுணத்துவத்திற்கு ஏற்ப இணைக்கப்படுகின்றன என்றும், ஒவ்வொரு பிரிவிலும் மாநில, மாவட்ட அளவில் எத்தனை பேர் உள்ளனர் என்பதும், தொடர்பு கொள்ள வேண்டிய மாநில மற்றும் மாவட்ட மைய ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் தொடர்பு எண்களும் விவரங்களில் உள்ளன என்றும் அமைச்சர் குழுவிடம் கூறப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x