Published : 24 Apr 2020 07:18 PM
Last Updated : 24 Apr 2020 07:18 PM

இது நெருக்கடி காலம்; பணத்தை கூடுதலாக அச்சடிக்க வேண்டும், ஏழைகளுக்கு இந்தியா ஒன்றுமே செய்யவில்லை: நோபல் பரிசு வென்ற  அபிஜித் பானர்ஜி விமர்சனம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் லாக் டவுனினால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், தொழில்கள் முடக்கப்பட்டன, இந்தியப் பொருளாதராத்தில் 75%க்கும் மேல் பங்களிப்பு செய்யும் வெகுஜன பொருளாதாரத் தொழில்கள் அல்லது முறைசாரா தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் வேலைகளை இழந்துள்ளனர், இவர்களுக்காக அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுவரை 1.7 லட்சம் கோடி நிவாரண பேக்கேஜ் மட்டுமே அரசு அறிவித்துள்ளது., இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8% தான், இது பெரிய நிவாரணமல்ல, போதாது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பிபிசி -க்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

போதுமானது என்று கூறும் அளவுக்குக் கூட மத்திய அரசு இன்னும் ஏழைகளுக்கு எதையும் செய்யவில்லை. பணவீக்கம் குறித்த அச்சம் காரணமாக இருக்கலாம். ஏனெனில் சரக்கு மற்றும் சேவைகள் போதுமான அளவுக்கு இல்லை. ஆனால் வருவாய் இடைவெளியைக் குறைக்க இந்தியா ஏதாவது செய்தாக வேண்டும். பணத்தைச் செலவழிப்பதில் அரசு இன்னும் ஆக்ரோஷமாக ஈடுபட வேண்டும்.

ஏழைகளுக்கு பணத்தை அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தேவை பூர்த்தியடைவதோடு பொருளாதாரமும் மீண்டெழும்.

ஏற்கெனவே பொருளாதாரத்தில் தேவை சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் கரோனா கொள்ளை நோய் இரட்டை அடியாக விழுந்துள்ளது. லாக் டவுனும் அவசியம், தொலைநோக்கும் அவசியம். வாக்சைன் கண்டுபிடிக்கப்படும் வரை கரோனா எப்படியும் தணியாது, எனவே தொலைநோக்குடன் திட்டங்களை வகுக்க வேண்டும்.

தெளிவான நன்றாகச் சிந்திக்கப்பட்ட திட்டம் தேவை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் இந்தியா தெளிவாக இருக்க வேண்டும்.

ஏற்கெனவே அறிவித்த நலத்திட்டங்களுடன் பயனாளர்களுக்கு இன்னும் கூடுதல் ரொக்கம் அளிக்கப்பட வேண்டும். அதன் மூலம்தான் லாக்டவுன் அகற்றப்பட்டவுடன் தேவைக்கான உணர்வை ஏற்படுத்த முடியும். பணத்தை கூடுதலாக அச்சடிக்கவும் செய்யலாம். தவறில்லை. மக்களுக்கு தேவை உறுதியான நிவாரனம். இந்த நேரத்தில் நலத்திட்டங்களுக்கு தகுதியுடையவர்கள் யார் தகுதியற்றவர்கள் யார் என்று பாகுபாடு பார்க்க முடியாது. மேலும் இவ்வாறு பார்ப்பது துல்லியமாகவும் அமையாது.

நாம் இங்கு துல்லியமாக இருக்க முடியாது, இது அவசரகாலம், நெருக்கடி காலம்.

இவ்வாறு கூறினார் அபிஜித் பானர்ஜி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x