Published : 23 Apr 2020 12:04 PM
Last Updated : 23 Apr 2020 12:04 PM
கரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதாரச் சரிவு, இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் ஆகியவற்றால் நடப்பு நிதியாண்டில் (2020-21) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.8 சதவீதமாக அதாவது ஒரு சதவீதத்துக்கும் கீழாக வீழ்ச்சி அடையும் என பிட்ச் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது.
இதற்கு முன் பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த நிதியாண்டில் 4.9 சதவீதம் வளர்ச்சி அடையும் எனக் கணித்திருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 0.8 சதவீதமாக வீழ்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், வரும் 2021-22ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக மீண்டெழுந்து வளர்ச்சி அடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது பிட்ச் ரேட்டிங்ஸ்
குறிப்பாக நடப்பு நிதியாண்டில் இரு காலாண்டுகளிலும் பொருளாதார வளர்ச்சி மைனஸில் செல்லும் எனத் ெதரிவிக்கப்பட்டுள்ளது. முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையில் பொருளாதார வளர்ச்சி மைனில் சென்று -0.2 சதவீதமாகவும், ஜுலை முதல் செப்டம்பர் மாதம் மைனஸில் சென்று -0.1 சதவீதமாக சரியும் எனத் தெரிவித்துள்ளது. 2020 காலண்டர் ஆண்டில் 1.8 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஆனால், கடந்த ஜனவரி-மார்ச் மாதத்தில் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பொருளாதார சரிவுக்கு முக்கியக் காரணமாக, நுகர்வோர் மத்தியில் செலவு செய்யும் பழக்கம் குறைந்து வருவது என பிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. அதாவது நடப்பு நிதியாண்டில் வெறும் 0.3 சதவீதம் மட்டுமே மக்கள் மத்தியி்ல செலவு செய்யும் பழக்கும் இருக்கும் என்றும் கடந்தஆண்டில் 5.5 சதவீதம் இருந்தது. செலவு செய்யும் அளவு குறைவதால் பொருளாதாரத்தில் தேக்கநிலை ஏற்பட்டுவளர்ச்சி குறையும் எனத் தெரிவித்துள்ளது
பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் பிரையன் கோல்டன் கூறுகையில் “ 2020-ம் ஆண்டில் உலக அளவிலான பொருளாதார வளர்ச்சியே 3.9 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கிறோம். கடந்த போர்க்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைப் போன்று இது இருக்கும். 2009-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார சரிவைப் போல் இரு மடங்கு பாதிப்புஇருக்கும் .உலகளவில் 2.80 லட்சம் கோடி டாலர் வருமான இழப்புஏற்படும். கரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து எந்த நாடும், எந்த பிராந்தியமும் தப்பிக்க வாய்ப்பில்லை “ எனத் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT