Published : 20 Apr 2020 06:13 PM
Last Updated : 20 Apr 2020 06:13 PM
கரோனா தொற்றை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தப்படும் ஆர்டிபிசிஆர் சோதனை கருவிகள் சரியாக செயல்படவில்லை என மேற்குவங்க அரசு கூறியுள்ள நிலையில் இதுபற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.
கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அறிகுறி தெரியாத வீடுகளில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் இந்த நோய் சமூகப்பரவல் நிலையை அடையாமல் இருக்க ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் விரைவு சோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இதில், பரிசோதனை முடிவுகள் 15 நிமிடத்திற்குள்ளாகவே முடிவுகள் கிடைக்கும். ஒரு நாளைக்கு நிறைய பேரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்யலாம். ஆனால், இது மட்டுமே இறுதியான கரோனா பரிசோதனை முடிவு இல்லை.
இதனைத் தொடர்ந்து உண்மையான கொரானா பரிசோதனை என்பது மூக்கு அல்லது தொண்டையில் ஸ்வாப் செய்து எடுக்கப்படும் சளி, இரத்தம் ஆகியவற்றை பரிசோதிக்கும் பிசிஆர் சோதனைதான். இதன் மூலமே கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது முடிவு செய்யப்படும்.
சளி மூலம் எவ்வளவு வைரஸ் வெளிப்படுகிறது, எப்படி எடுக்கப்படுகிறது, மாதிரிகள் ஆய்வகத்துக்கு கொண்டு செல்லும் அவகாசம் ஆகியவை குறித்து இந்த முடிவுகளிலும் வேறுபாடுகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சிலருக்கு இரு முறை கூட இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த சோதனைதான் மிக முக்கியமானது.
இதுகுறித்து இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவர் கங்கோத்கர் கூறியதாவது:
கரோனா தொற்றை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தப்படும் ஆர்டிபிசிஆர் சோதனை கருவிகள் சரியாக செயல்படவில்லை என மேற்குவங்க அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் இந்த கருவிகள் அமெரிக்காவின் எப்டிஐ அனுமதி வழங்கிய ஒன்று. இவை சரியான தரத்தில் உள்ளன. ஆனால் இந்த கருவிகளை 20 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் மட்டுமே வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் சரியாக செயல்படாது. அதன் மூலம் பெறப்படும் முடிவுகளும் தவறாக அமைந்து விடும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT