Published : 20 Apr 2020 02:47 PM
Last Updated : 20 Apr 2020 02:47 PM
மேற்குவங்கத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இறந்த நபரின் மரணத்தை மறைக்க மாநில அரசு முயன்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இறந்த நபரின் மரணத்தை மறைக்க மாநில அரசு முயன்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சலீம் கூறியுள்ளதாவது:
மால்டாவைச் சேரந்த நேபால் பர்மன் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது உடல் ஏப்ரல் 12-ம் தேதி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு எரியூப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு ஏப்ரல் 13-ம் தேதி கரோனா பரிசோதனை நடைபெற்றதாகவும், அவருக்கு கரோனா தொற்று ஏற்படவில்லை எனவும் மேற்குவங்க அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
முன்கூட்டியே இறந்த நபருக்கு இவர்கள் எப்படி கரோனோ பரிசோதனை செய்தார்கள். கரோனாவில் இறந்தவர்கள் எண்ணிக்கையை குறைத்து காட்ட வேண்டும் என்பதற்காக முதல்வர் மம்தா பானர்ஜி இதுபோன்று செயல்படுகிறார்.’’ எனக் கூறினார். இத்துடன் அதற்கான ஆதாரத்தையும் சலீம் வெளியிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT