Last Updated : 19 Apr, 2020 07:27 PM

1  

Published : 19 Apr 2020 07:27 PM
Last Updated : 19 Apr 2020 07:27 PM

தடபுடல் மகன் திருமணம்: எடியூரப்பா பதிலால் எச்.டி.குமாராசாமி நிம்மதிப் பெருமூச்சு

கரோனா லாக்டவுனில் மகன் திருமணத்தை பண்ணை வீட்டில் தடபுடலாக நடத்தியதையடுத்து கர்நாடகா மாநில முந்தைய முதல்வர் ஹெச்.டி.குமாராசாமி நடவடிக்கை பாயும் என்ற கவலையில் இருந்தார்.

ஆனால் முதல்வர் எடியூரப்பா, இந்நிலையில், இந்த நிகழ்வு குறித்து பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ‛தேவையான அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டன, திருமணம் எளிமையான முறையில் நடத்தப்பட்டது. அதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அதை தங்கள் எல்லைக்குள் சிறப்பாகச் செய்தார்கள். அதற்காக நான் அவர்களை வாழ்த்துகிறேன்,' என்றார். முதல்வரின் இந்த பதிலால் குமாரசாமி தரப்பு சற்று நிம்மதி அடைந்துள்ளது.

கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, தனது மகன் நிகிலுக்கும், காங்., முன்னாள் அமைச்சரின் பேத்தியான ரேவதி என்பவருக்கும், பெங்களூருவை அடுத்த ராமநகர மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது. இதற்காக 42 வாகனங்கள் மற்றும் 120 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கர்நாடக போலீசார் தெரிவித்தனர். ஆனால், ஊரடங்கு நேரத்தில் நடந்த இத்திருமணத்தில் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை எனவும், திருமணத்தில் பங்கேற்றவர்கள் யாரும் மாஸ்க் போன்ற பாதுகாப்புடன் இல்லை எனவும் பலராலும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இது குறித்து குமாரசாமி கூறுகையில், இரு குடும்பத்தார்களை சேர்ந்த 60 முதல் 70 பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள், விழாவில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது, எனக்கூறினார். ஆனாலும், சர்ச்சையான இத்திருமணம் குறித்து குமாரசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசியல் விமர்சகர்கள் குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x