Last Updated : 19 Apr, 2020 06:33 PM

1  

Published : 19 Apr 2020 06:33 PM
Last Updated : 19 Apr 2020 06:33 PM

பிஸ்கெட் வாங்க வந்ததற்காக இளைஞருக்கு போலீஸ் அடி உதை: 3 நாட்களுக்குப் பிறகு உ.பி.யில் இளைஞர் மரணம் 

பிரதிநிதித்துவப் படம்

உத்தரப் பிரதேச மாநில அம்பேத்கர் நகர்வாசியான ரிஸ்வான் அகமெட் என்ற தினக்கூலியான 22 வயது இளைஞர் 3 நாட்களுக்கு முன்பாக லாக் டவுன் உத்தரவுகளை மீறி பிஸ்கெட் வாங்குவதற்காக வீட்டை விட்டு ரோடுக்கு வந்த போது போலீசாரால் அடிக்கப்பட்டதாகவும் இதனால் 3 நாட்கள் சென்று அவர் இறந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

இறந்த ரிஸ்வானின் தந்தை இஸ்ரெய்ல் தனது புகாரில், ஏப்ரல் 15ம் தேதி அம்பேத்கர் நகர் பகுதியில் சஜ்ஜாபூர் என்ற இடத்தில் மாலை 4 மணியளவில் என் மகன் பிஸ்கெட் வாங்குவதற்காக வீட்டை விட்டு கிளம்பினான்

சாலையில் உள்ளூர் போஸ்ட் ஆபீஸ் அருகே பெண் இன்ஸ்பெக்டர் அவரை தடுத்துள்ளார். அதன் பிறகு என் மகனை போலிசார் லட்டியால் கண்டபடி தாக்கியுள்ளனர். இதனால் அவன் படுகாயமடைந்தான். வீட்டுக்கு வந்த என் மகனின் உடல் நீலமாக இருந்தது.

லாக் டவுனில் வெளியே செல்ல முடியாததால் மகனை வீட்டிலேயே மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்தோம் ஆனால் பயனில்லை இதனையடுத்து உள்ளூர் மருத்துவமனைக்குச் இட்டுச் சென்றோம், அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லக் கேட்டுக் கொண்டனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி என் மகன் இறந்தான் என்று புகாரில் தெரிவித்தார்.

அவனீஷ் குமார் மிஸ்ரா என்ற காவல் உயரதிகாரி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, போலீஸ் மீதான புகார் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, சிசிடிவி கேமராக்கள் ஆதாரங்களுடன் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அவர் உறுதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x