Published : 19 Apr 2020 10:48 AM
Last Updated : 19 Apr 2020 10:48 AM
ஏப்ரல் 15ம் தேதி தன் திருமணத்துக்காக பஞ்சாப் லூதியனாவிலிருந்து உத்தரப்பிரதேசத்துக்கு சைக்கிளேயே ஒருவாரம் பயணித்து வந்த சோனு குமார் சவுகான் கடைசியில் கடந்த ஞாயிறன்று கரோனா தனிமை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
24 வயது சோனு குமார் சவுகான் ராப்பகலாக ஒருவாரம் சைக்கிளேயே லூதியானாவிலிருந்து உ.பி. நேபாள் எல்லையில் இருக்கும் தன் ஊருக்கு தன் 3 நண்பர்களுடன் வந்தார். ஆனால் இவரது வீடு இன்னும் 150கிமீ தூரம் உள்ள நிலையில் கரோனா தனிமைப்பிரிவில் முடிந்தார்.
சவுகான் லூதியானாவில் டைல்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர் தன் திருமணத்துக்காக 3 நண்பர்களுடன் சைக்கிளில் புறப்பட்டார். சுமார் 850 கிமீ தூரம் படாதபாடு பட்டு கடந்தனர். இவர்கள் மாவட்ட எல்லையில் அதிகாரிகளிடம் சிக்கினர், இதனையடுத்து தனிமைப்பிரிவுக்கு அனுப்பப்பட்டனர்.
”நான் வீடு சேர்ந்திருந்தால் எனக்குத் திருமணம் நடந்திருக்கும். ஆனால் அதிகாரிகள் நான் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் அனுமதிக்கவில்லை” என்று பிடிஐ இடம் தெரிவித்தார்.
ஆனால் ஆரோக்கியம் திருமணத்தை விட முக்கியமென்பதை தான் ஒப்புக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இவர்கள் கரோனா பரிசோதனை முடிவுகள் நெகெட்டிவ் என்று வந்தால் இவர்கள் 14 நாட்களில் ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட எஸ்.பி. தேவ்ராஜன் வர்மா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT